Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்னால தூங்க முடியவில்லை..! பயங்கர வலி, தல சுத்துது, வாந்தி வருது..! கதறும் அந்த வீரர்

Recommended Video

Smith floored by Archer| ஸ்மித் காயத்தால் ஏற்பட்ட சர்ச்சை... பதறிய ஆர்ச்சர்

லண்டன்: எனக்கு கழுத்துப் பகுதியில் வலி இருக்கிறது, நேரம் செல்ல செல்ல தலையை சுற்றி வாந்தி வருகிறது என்று ஸ்டீஸ் ஸ்மித் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையே தற்போது ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது. தொடரின் 2வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

அந்த போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. போட்டியில் இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் 148 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பந்து ஸ்மித்தின் கழுத்துப் பகுதியை பலமாக தாக்கியது.

தடுமாறி விழுந்தார்

தடுமாறி விழுந்தார்

ஒரு கணம் நிலைகுலைந்து கீழே விழுந்த ஸ்மித் சிறிது நேரம் கழித்து மைதானத்தை விட்டு வெளியேறினார். அதனை தொடர்ந்து அவருக்கு பதிலாக மாற்று வீரர் மார்னஸ் லாபுசாக்னே இறங்கி பேட்டிங் செய்த வரலாற்று நிகழ்வை பதிவு செய்தார்.

உடல்நிலை எப்படி உள்ளது?

உடல்நிலை எப்படி உள்ளது?

இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி வருகிற 22ம் தேதி துவங்க உள்ளது. இந்த நிலையில் தமது உடல்நிலை குறித்து முதன்முறையாக வாய் திறந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

முக்கிய சிகிச்சை

முக்கிய சிகிச்சை

அவர் கூறியிருப்பதாவது: தற்போது அனைத்து விதமான முக்கிய சிகிச்சைகளும் தரப்படுகிறது. இரவு நேரங்களில் நான் நிறைய தூங்குவது கிடையாது. ஆனால் காயப்பட்ட அன்று இரவு முழுதும் நன்றாகத் தூங்கினேன்.

கழுத்தில் வலி

கழுத்தில் வலி

ஆனால் மறுநாள் காலை தலை பயங்கரமாக வலிக்க தொடங்கியது. மேலும் கழுத்துப் பகுதியில் கையை வைத்தால் போதும், வலி தாங்க முடியவில்லை. யார் எனது கழுத்தில் தொட்டாலும் எனக்கு வலிக்கிறது.

மருத்துவ கண்காணிப்பு

மருத்துவ கண்காணிப்பு

நான் இப்போது மருத்துவ குழுவின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறேன். காயத்தின் தன்மையை பொருத்தே என்னால் அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்பது தெரியும். இன்னும் எனக்கு கழுத்துப் பகுதியில் வலி இருப்பது உண்மைதான்.

நம்புகிறேன்

நம்புகிறேன்

அடுத்த 6 நாட்களுக்கு மருத்துவக்குழுவின் முழு கண்காணிப்பில் இருப்பேன். அடுத்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகிவிடுவேன் என நம்புகிறேன். ஆனால் மருத்துவர்கள் சொல்வதில் தான் எல்லாமே அடங்கியிருக்கிறது என்றார்.

Story first published: Monday, August 19, 2019, 16:40 [IST]
Other articles published on Aug 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+