Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி - வில்லி இடையே யுத்தம்.. யார் சிறந்த வீரர்.. என்ன சொல்கிறது புள்ளிவிவரங்கள். முழு விவரம்!

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பலம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.

உலகில் டெஸ்ட் கிரிக்கெட் தான் இருப்பதிலேயே சவாலான ஒன்று. இதனால் தான் இளம் வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் மூலம் மற்ற போட்டிகளுக்கு தேர்வு செய்கின்றனர்.

இந்த டெஸ்ட் கிரிக்கெட் மூலம் அறிமுகமாகி தற்போது தலை சிறந்த வீரர்களாக ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, கேன் வில்லியம்சன், பாபர் அசாம், ஜோ ரூட் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இதில் கோலி - வில்லியம்சன் பலத்தை மட்டும் பார்க்கலாம்.

மொத்த புள்ளிவிவரம்

மொத்த புள்ளிவிவரம்

இதுவரை 91 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 7490 ரன்களை எடுத்துள்ளார், அவரின் சராசரி 52 ரன்களுக்கும் மேல். வில்லியம்சன் இதுவரை 83 போட்டிகளில் மட்டுமே விளையாடி 7115 ரன்களை எடுத்துள்ளார். சராசரியை பார்த்தால் கோலியை விட ( 54) வில்லியம்சன் அதிகமாக உள்ளார். ஆனால் அதிக சதம் மற்றும் அரைசதம் அடித்ததில் கோலிதான் முதலிடத்தில் உள்ளார்.

4வது இன்னிங்ஸ் ஆட்டம்

4வது இன்னிங்ஸ் ஆட்டம்

டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸை விளையாடுவது மிக சவாலானது. இதில் விராட் கோலி 50.94 என்ற நல்ல சராசரியுடன் கிட்டத்தட்ட 1000 ரன்களை குவித்துள்ளார். இதில் 3 சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். வில்லியம்சன் இதில் நீண்ட தூரம் இல்லை. அவரின் சராசரி 49.14 ரன்கள் உள்ளது. இதுவரை 688 ரன்கள் எடுத்துள்ள வில்லியம்சன் 688 ரன்களை விளாசியுள்ளார். இதில் 3 சதம் மற்றும் அரைசதம் எனக்கூறியுள்ளார்.

உள்ளூர் போட்டிகள்

உள்ளூர் போட்டிகள்

உள்நாட்டு மைதானங்களில் பேட்ஸ்மேனால் சிறப்பாக செயல்பட முடியும். அந்த வகையில் கோலி - வில்லியம்சன் இருவருமே 66 போட்டிகளை உள்நாட்டில் விளையாடியுள்ளனர். அதில் கோலி 3730 ரன்களும், வில்லியம்சன் 3788 ரன்களும் அடித்துள்ளனர். இருவரின் புள்ளிவிவரங்களும் கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளன. இருவருமே சொந்த மண்ணில் தலா 13 சதங்களை விளாசியுள்ளனர்.

வெளிநாட்டு போட்டிகள்

வெளிநாட்டு போட்டிகள்

வெளிநாட்டு மைதானங்களில் கோலி - வில்லியம்சன் இருவருக்குமே புள்ளிவிவரங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் உள்ளது. விராட் கோலி 87 போட்டிகளில் விளையாடி 3760 ரன்களும் வில்லியம்சன் 78 போட்டிகளில் ஆடி3327 ரன்களை எடுத்துள்ளார். கோலி 14 சதங்களும் வில்லியம்சன் 11 சதங்களும் அடித்துள்ளனர்.

முடிவு என்ன?

முடிவு என்ன?

அனைத்து புள்ளிவிவரங்களையும் வைத்து பார்க்கும் போது இரு வீரர்களுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப்போட்டியில் நல்ல போட்டியை ஏற்படுத்துவார்கள் என தெரிகிறது. அவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே நேரம் தான் இருவரில் எந்த பேட்ஸ்மேன் என்பதை தீர்மானிக்க வேண்டும்.

Story first published: Wednesday, June 2, 2021, 21:03 [IST]
Other articles published on Jun 2, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+