For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆக்லாந்தைக் கலங்கடித்த கப்தில் "நரி"...!

ஆக்லாந்து: மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சை ரொம்பவே கேவலப்படுத்தி விட்டார் நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில்.

சிங்கத்தை சீண்டியது மட்டுமல்லாமல் ஓவராகவே நோண்டியும் விட்டது இந்த சிறு நரி.. ஆம், கப்தில் என்ற பெயரின் அர்த்தமும் கூட நரிதான். பிரெஞ்சு வார்த்தை இது.

உண்மையிலேயே நரி போலத்தான் நேற்று ஆடினார் கப்தில். மேற்கு இந்தியத் தீவுகளின் பந்து வீச்சை ஆரம்பத்தில் அமைதியாக சந்தித்த அவர் அதன் பிறகு புத்திசாலித்தனமாக பாயத் தொடங்கினார்.

நடப்பு உலகக் கோப்பையில் கப்தில் ஆடிய ஆட்டங்களிலிருந்து சிதறித் தெளித்த சாதனைகளை அள்ள பெரிய வாளி வேண்டும்.. அதில் சில....

2 சதம்..3 அரை சதம்

2 சதம்..3 அரை சதம்

உலகக் கோப்பையில் இதுவரை 15 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள கப்தில் மொத்தம் 2 சதம், 3 அரை சதம் போட்டுள்ளார்.

பவுண்டரிகளில் சாதனை

பவுண்டரிகளில் சாதனை

நேற்றைய ஆட்டத்தில் அவர் மொத்தம் 24 பவுண்டரிகளை விளாசினார். இதன் மூலம் திலகரத்னே தில்ஷன் வைத்திருந்த 22 பவுண்டரிகள் என்ற சாதனையை முறியடித்தார்.

2வது அதிகபட்ச சிக்ஸர்கள்

2வது அதிகபட்ச சிக்ஸர்கள்

நடப்பு உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை கெய்லிடம் உள்ளது. அவர் மொத்தம் 16 சிக்ஸர்களை ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியின்போது விளாசியிருந்தார். நேற்றைய ஆட்டத்தில் கப்தில் 11 சிக்ஸர்களை விளாசி 2வது இடத்தைப் பிடித்தார்.

இரண்டையும் சேர்த்தால் சாதனை பாஸ்

இரண்டையும் சேர்த்தால் சாதனை பாஸ்

அதேசமயம், நேற்றைய ஆட்டத்தில் அவர் விளாசிய 24 பவுண்டரிகளையும், 11 சிக்ஸர்களையும் சேர்த்தால் அது புதிய உலகக் கோப்பை சாதனையாகும்.

உலக சாதனை ரோஹித்திடம்

உலக சாதனை ரோஹித்திடம்

இருப்பினும் ஒரு நாள் போட்டியில் ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகள் (33 பவுண்டரி, 9 சிக்ஸர்கள்) விளாசிய சாதனை ரோஹித் சர்மாவிடம்தான் உள்ளது.

ஒரு தொடரில் 2 சதம்

ஒரு தொடரில் 2 சதம்

ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 2 சதம் அடித்த 2வது நியூசிலாந்து வீரர் என்ற பெருமை கப்திலுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முன்பு நியூசிலாந்தின் கிளன் டர்னர் 1975ம் ஆண்டு இந்த சாதனையைச் செய்திருந்தார்.

150க்கு மேல்

150க்கு மேல்

உலகக் கோப்பைப் போட்டிகளில் 150 ரன்களுக்கு மேல் அடித்த நியூசிலாந்து வீரர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் டர்னர், இன்னொருவர் கப்தில்.

அடுத்தடுத்து செஞ்சுரி....

அடுத்தடுத்து செஞ்சுரி....

உலகக் கோப்பைப் போட்டியில் அடுத்தடுத்து சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் கப்தில் மட்டுமே.

400 ரன் குவித்த முதல் கிவி

400 ரன் குவித்த முதல் கிவி

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 400 ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் கப்தில் மட்டுமே. அவரது சராசரி 50க்கு மேல் உள்ளது.

நாக் அவுட் போட்டியில் இதுதான் நச்!

நாக் அவுட் போட்டியில் இதுதான் நச்!

உலகக் கோப்பைத் தொடர்களில், நாக் அவுட் போட்டிகளில் மிகப் பெரிய ஸ்கோரை எடுத்த முதல் வீரர் கப்தில்தான். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், 2007ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 104 பந்துகளில் 149 எடுத்ததே சாதனையாக இதுவரை இருந்தது.

2வது நியூசி வீரர்

2வது நியூசி வீரர்

உலகக் கோப்பைத் தொடர்களின் நாக் அவுட் போட்டி ஒன்றில் சதம் போட்ட 2வது நியூசிலாந்து வீரர் கப்தில். முதல் வீரர் கிறிஸ் ஹாரிஸ்.

Story first published: Sunday, March 22, 2015, 9:57 [IST]
Other articles published on Mar 22, 2015
English summary
See the statistical highlights of Guptill innings which marred the WI yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+