Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரசன்னாவிடம் கெட்ட பெயர் வாங்கிய அஸ்வின்!

பெங்களூர்: ஒரே மாதிரியாக பந்து வீசுகிறார் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின், வெரைட்டி இல்லை. அவரை அணியிலிருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் பிரசன்னா கூறியுள்ளார்.

நியூசிலாந்து தொடரில் அஸ்வினின் பந்து வீச்சு ஏமாற்றம் தருவதாக உள்ளதாகவும் பிரசன்னா ஏமாற்றம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஒன்இந்தியாவின் தட்ஸ்கிரிக்கெட் இணையதளத்திற்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டி....

பார்மில் இல்லை அஸ்வின்

பார்மில் இல்லை அஸ்வின்

அஸ்வின் தற்போது பார்மில் இல்லை. அவரது செயல்பாடுகள் ஏமாற்றம் தருவதாக உள்ளது. அவரை நீக்கி விட்டு, ஸ்டூவர்ட் பின்னியை சேர்க்க வேண்டும்.

வேரியேஷன் இல்லை

வேரியேஷன் இல்லை

அஸ்வினின் பந்து வீச்சில் வேரியேஷன் இல்லை. வெரைட்டை இல்லை. ஒரே மாதிரியாக பந்து வீசுகிறார்.

ரெய்னா, சர்மாவே போதும்

ரெய்னா, சர்மாவே போதும்

அஸ்வினுக்குத் தரும் 10 ஓவர்களையும் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மாவிடமே கொடுத்து விடலாம்.

காத்திருந்து அடித்து நொறுக்கிறார்கள்

காத்திருந்து அடித்து நொறுக்கிறார்கள்

அஸ்வின் எப்போது பந்து வீசுவார், அதை அடித்து நொறுக்கலாம் என்று எதிரணி பேட்ஸ்மேன்கள் ஆவலோடு காத்திருக்கும் அளவுக்கு அவரது பந்து வீச்சு மோசமாகி விட்டது என்று கூறியுள்ளார் பிரசன்னா.

கடைசி 5 ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின்

கடைசி 5 ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின்

கடைசி ஐந்து ஒரு நாள் போட்டிகளில் அஸ்வின் மொத்தம் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இதனால்தான் அவர் சர்ச்சைக்கிடமாகியுள்ளார்.

நியூசிலாந்து தொடரிலும் மோசம்

நியூசிலாந்து தொடரிலும் மோசம்

தென் ஆப்பிரிக்கத் தொடரில் அவர் 169 ரன்களைக் கொடுத்து ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். நடப்பு நியூசிலாந்து தொடரில் அவர் இதுவரை 2 போட்டிகளில் பந்து வீசி, 102 ரன்களைக் கொடுத்தார். விக்கெட் வீழ்த்தவில்லை.

அஸ்வின் சுதாரிக்கனுமப்பா... இல்லாவிட்டால் வேறு சூறாவளி உள்ளே புகுந்து விடும்.

Story first published: Thursday, January 23, 2014, 14:31 [IST]
Other articles published on Jan 23, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+