For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஆஸி. அணியில் முக்கிய மாற்றம்.. அதிரடி வீரர்கள் மீண்டும் வருகை

மும்பை : பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இதன் மூலம் உலக டெஸ்ட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிக்கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி பங்கேற்கிறது.

இதில் முதல் போட்டி 17ஆம் தேதி மும்பையிலும், 19ஆம் தேதி விசாகப்பட்டினத்திலும், 22 ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி சென்னையிலும் நடைபெற இருக்கிறது.

கேப்டன் ஸ்மித்

கேப்டன் ஸ்மித்

இதில் ஆஸ்திரேலிய அணியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் இருந்த நிலையில் தற்போது அவருடைய தாயார் காலமான நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இதனால் ஒருநாள் தொடர்களிலும் கேப்டனாக ஸ்மித் செயல்படுவார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இதனால் கம்மின்ஸ்க்கு மாற்றுவீராக யாரும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகிய நிலையில் மாற்றுவீராக நாதன் எலிஸ் சேர்க்கப்பட்டு இருந்தார். பிஞ்ச் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் கம்மின்ஸ் கேப்டன் பொறுப்புக்கு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக வெளியேறிய டேவிட் வார்னர் தற்போது ஒரு நாள் தொடருக்காக இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.

திரும்பிய நட்சத்திரங்கள்

திரும்பிய நட்சத்திரங்கள்

இதேபோன்று ஏகார், மிட்செல் மார்ஸ் போன்ற வீரர்களும் ஒரு நாள் அணியில் திரும்பி இருக்கிறார்கள். அதிரடி வீரர் மேக்ஸ்வெல் காயத்திலிருந்து குணமடைந்து தற்போது ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மெக்டோனல்ட் தற்போது ஒரு நாள் அணியில் சில வீரர்கள் திரும்பி இருக்கிறார்கள்.

பயிற்சியாளர் கருத்து

பயிற்சியாளர் கருத்து

அது அணியின் பலத்தை அதிகப்படுத்தி இருக்கிறது.

ஒரு நாள் போட்டியில் எங்களுடைய பேட்டிங் வரிசையை அதிகப்படுத்தி இருக்கிறோம். தற்போது எட்டு வீரர்களுக்கு மேல் பேட்டிங் செய்வார்கள். இந்த முறையை தான் இந்திய தொடரிலும் நாங்கள் பயன்படுத்துவோம். எங்களுடைய அணியில் நிறைய ஆல்ரவுண்டர்கள் இருக்கிறார்கள். இதனால் யாரை தேர்வு செய்ய வேண்டியது என்ற சில கேள்விகள் இருக்கிறது என மெக்டொனல்ட் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 14, 2023, 16:47 [IST]
Other articles published on Mar 14, 2023
English summary
Steve smith appoints captain for odi series vs india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+