
சிங்கிள்ஸ்
அக்சர் பட்டேல் ஆட்டம் இழந்தவுடன் அஸ்வின் களத்திற்கு வந்தார். ஆனால் அவர் அதிரடியாக ஆடுகிறேன் என்று தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதேபோன்று உமேஷ் யாதவும் ரன் அவுட் ஆனதால் முகமது சமியை நம்பி விராட் கோலி சிங்கிள்ஸ் ஆட மறுத்துவிட்டார். இது விராட் கோலி செய்த தவறாக தான் பார்க்கப்படுகிறது. முகமது ஷமியை கொஞ்சம் நம்பி இருந்தாலும் விராட் கோலி இரட்டை சதம் அடித்திருக்கலாம்.

விராட் கோலியின் முயற்சி
விராட் கோலி சிங்கிள்ஸ் ஓட மாட்டார் என்பதை புரிந்து கொண்டார் ஸ்மித்.
இதனால் டி20 கிரிக்கெட்டில் எப்படி பில்டிங் நிறுத்துவார்களோ அதே போன்று ஒரு பில்டிங் செட்டப்பை நிறுத்தினார் ஸ்மித். அதாவது ஆட்டத்தில் விளையாடிய அனைத்து பில்டர்களையும் பவுண்டரி லைனில் ஸ்மித் நிற்க வைத்தார். இதன் காரணமாக விராட் கோலி எவ்வளவு முயற்சித்தும் பந்து பவுண்டரிக்கு செல்லவில்லை. இதனால் 180 ரன்களிலே விராட் கோலி சிக்கிக் கொண்டார்.

ஸ்மித் யுத்தி
இரண்டு ரன்கள் ஓட முடியாத அளவிற்கு பில்டர்களும் பார்த்துக் கொண்டார்கள்.இதற்காக அவர்கள் பவுண்டரி லைன் ஓரமாக நிற்காமல் எல்லைக்கோட்டில் இருந்து 5 மீட்டர் தள்ளி நின்றார்கள். இதன் மூலம் டபுள்ஸ் ஓடுவதை ஆஸ்திரேலிய வீரர்கள் எளிதாக தடுத்தார்கள். இதனால் விராட் கோலி தூக்கி அடிக்க அது நேரடியாக கேட்ச் ஆனது.

பாராட்டு
விராட் கோலி உடன் ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தால் அவர் சுலபமாக இரட்டைச் சதம் அடித்திருப்பார்.இதனால் கோலிக்கு அந்த வாய்ப்பு அவருக்கு பறிபோய்விட்டது. ஸ்மத்தின் இந்த செயலை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வெகுவாக பாராட்டியுள்ளார். ஆட்டத்தை சரியாக புரிந்து கொண்ட ரன்களை கட்டுப்படுத்த சிறப்பான திட்டத்தை ஆஸ்திரேலிய கையாண்டு இருப்பதாக அவர் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











