Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஸ்டீவ் ஸ்மித் : அவரு அடிச்சு நொறுக்குற பேட்ஸ்மேன்.. அவர் கூட நான் பேட்டிங் செய்யப் போறேன்

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு திரும்பி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித், தன் அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு பந்து சேத விவகாரத்தில் சிக்கிய ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் இந்த சீசனில் தங்கள் அணிகளுக்காக ஆடவுள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் குறித்து சமூக வலைதளத்தில் பேசிய போது. அவர் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்களில் ஒருவர் எனக் குறிப்பிட்டார். கடந்த ஐபிஎல் சீசனில் ஜோஸ் பட்லர் அத்தியடி காட்டி, பந்துகளை அடித்து நொறுக்கி ரன் குவித்தார். மேலும், இங்கிலாந்து அணிக்காக ஆடிய போதும் பல சிறந்த அதிரடி ஆட்டங்களை ஆடியுள்ளார் பட்லர். அதை தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

உற்சாகம் அளிக்கும் வீரர்

உற்சாகம் அளிக்கும் வீரர்

"பட்லருடன் ஆடுவது சிறப்பாக இருக்கும். அவருடன் ஆடுவது எனக்கு சில விஷயங்களை எளிதாக்கி விடும். அவர் உற்சாகம் அளிக்கும் வீரர். மேலும், அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பேட்ஸ்மேன்களில் ஒருவர்" எனக் குறிப்பிட்டார் ஸ்டீவ் ஸ்மித்.

வார்னே செய்த மாற்றம்

வார்னே செய்த மாற்றம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த ஆண்டு தடுமாறி வந்த போது, ஆலோசகர் ஷேன் வார்னே அணியில் சில மாற்றங்களை செய்தார். ஜோஸ் பட்லரை துவக்க வீரராக இறக்குமாறு யோசனை கூறினார்.

பட்லர் அதிரடி

பட்லர் அதிரடி

அந்த யோசனை பெரிய அளவில் வேலை செய்தது. மிடில் ஆர்டரில் பெரிய ரன்களை குவிக்காத ஜோஸ் பட்லர், துவக்க வீரராக அதிரடி காட்டினார். கடந்த ஆண்டு இங்கிலாந்து அணிக்காகவும், பல சிறந்த அதிரடி ஆட்டங்களை ஆடியுள்ளார் பட்லர்.

Story first published: Tuesday, March 19, 2019, 17:42 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+