Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WATCH: பேட்டிங் பண்றத உட்டுட்டு..இன்னா டான்ஸ் வேண்டி கிடக்கு..!! ஆஷசில் அரங்கேறிய காமெடி..!

லண்டன்: ஆஷஸ் தொடரில் பேட்டிங் என்ற பெயரில் ஸ்டார் வீரர் ஸ்மித் நடனமாடியது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஆஷஸ் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 258 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Steve smith dances while batting in ashes test against england goes viral

தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 80 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 40 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டத்தை இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீரர் அலெக்ஸாண்ட்ரா கேலி செய்துள்ளார்.

அதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்மித் ஆடும் வீடியோ ஒன்றினையும் பகிர்ந்துள்ளார். அவர் பதிவிட்டதாவது: ஸ்டீவ் ஸ்மித் பந்துகளை அடிக்காமல் விடும் விதம் மிகவும் பொழுதுபோக்காகவும், வேடிக்கையாகவும் உள்ளது. இதுபோன்ற பேட்டிங்கை நான் நீண்ட வருடங்களாக பார்த்ததே கிடையாது என்பது போல பதிவிட்டுள்ளார்.

வீடியோவை கண்ட ரசிகர்கள் சிலர் ஸ்மித் நீங்கள் பேட்டிங் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை நடனம் ஆடாமல் இருங்கள். பந்து போடும் போது உங்களுக்கு என்ன டான்ஸ் வேண்டி இருக்கிறது என்பது போல கமெண்ட் செய்துள்ளனர்.

Story first published: Saturday, August 17, 2019, 18:01 [IST]
Other articles published on Aug 17, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+