ஓடி வந்த டீம் மேட்ஸ்.. என்ன இவர் பாதியில் வெளியேறுகிறார்.. பயிற்சியின் போதே நடந்த பரபர சம்பவம்!
சிட்னி: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பயிற்சியின் போதே பாதியில் வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடக்க உள்ள கிரிக்கெட் தொடருக்காக இரண்டு நாட்டு வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இரண்டு அணிகளுக்கும் இடையில் வரும் வியாழக்கிழமை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது.
இரண்டு அணிகளும் இதற்காக தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எப்படி
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கு தயாராகி வரும் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் பயிற்சியின் போதே பாதியில் வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று நடந்த வலைப்பயிற்சியின் போது நாள் முழுக்க ஸ்டீவ் ஸ்மித் மைதானத்திற்கு வரவில்லை.

கொஞ்ச நேரமும்
சில நிமிடங்கள் மட்டுமே அவர் மைதானத்திற்கு வந்து பயிற்சியை மேற்கொண்டார். அதிகபட்சம் இவர் 1 மணி நேரம் பேட்டிங் செய்து இருப்பார். ஆனால் அதன்பின் பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

என்ன நடந்தது
இவர் பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது கொஞ்சம் லேசாக தள்ளாடினார். காலில் காயம் இருப்பது போல கஷ்டப்பட்டார். இதையடுத்து மைதானத்திற்கு வெளியே இருந்த சக வீரர்கள், உள்ளே வந்து இவரை சோதனை செய்தனர். அதேபோல் அணியின் மருத்துவ குழுவும் இவரை சோதனை செய்தது.

சோதனை
இதன் பின் இவர் பயிற்சி மேற்கொள்ள கூடாது என்று பரிந்துரை செய்யப்பட்டது. இதன் காரணமாக பாதி பயிற்சியில் இவர் வெளியேறினார். அதன்பின் மீண்டும் பயிற்சி செய்ய வரவில்லை. இன்றும் இவர் பயிற்சி மேற்கொள்ள வரவில்லை.

காயம்
இவருக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே வார்னர், கேமரூன் கிரீன், வில் புக்கோவஸ்கி உள்ளிட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே முக்கியமான வீரர்கள் காயத்தில் உள்ள நிலையில் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் காயமாக இருக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications