Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனஉளைச்சல்.. 5 மாதங்களாக மனைவியை பார்க்கவில்லை.. பிரபல கிரிக்கெட் வீரர் வீட்டில் இப்படி ஒரு சிக்கலா?

சிட்னி: ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் குடும்பத்தில் சில பிரச்சனைகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையே தற்போது கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. ஒருநாள், டி 20 போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது.

கொரோனாவிற்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் கிரிக்கெட் போட்டிகள், தொடர்கள் நடந்து வருகிறது . வீரர்களை தனிமைப்படுத்துவது, வீரர்களை பயோ பபுளில் வைப்பது என்று நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

கட்டுப்பாடுகள்

முக்கியமாக ஆஸ்திரேலிய வீரர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டனர். அதற்கு முன் சில கிரிக்கெட் தொடரில் ஆடிவிட்டு நேரடியாக ஐபிஎல் தொடருக்கு வந்தனர். ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தும் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டார்.

மீண்டும் வந்தார்

மீண்டும் வந்தார்

ஐபிஎல் தொடரில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறது என்று ஸ்மித் அப்போதே குறிப்பிட்டு இருந்தார். தனிமைப்படுத்தப்படுவது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று ஸ்மித் குறிப்பிட்டு இருந்தார். இதன் காரணமாகவே ஸ்மித் பிக் பாஷ் லீக் போட்டிகளில் ஆடுவது இல்லை என்று முடிவு எடுத்தார்.

குடும்பம்

குடும்பம்

ஐபிஎல் தொடருக்கு பின் குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க வேண்டும் என்பதற்காக ஸ்மித் இப்படி முடிவு எடுத்து இருந்தார். ஆனால் ஸ்மித்திற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோரும் ஐபிஎல் தொடருக்கு பின் நேரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர், துபாயில் இருந்து நேரடியாக அழைத்து செல்லப்பட்டு , இந்திய தொடருக்காக தனிமைப்படுத்தப்பட்டார்.

முடியவில்லை

முடியவில்லை

இதனால் ஸ்மித் தனது குடும்ப உறுப்பினர்களை அப்போது பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக கடந்த 5 மாதங்களாக ஸ்மித் தனது மனைவியுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை என்கிறார்கள். வார்னர் உட்பட மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லோருக்கும் இடையில் பிரேக் கிடைத்த நிலையில், ஸ்மித் மட்டுமே பிரேக் இன்றி ஆடி வருகிறார்.

குடும்பம்

குடும்பம்

இதனால் இவரின் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. கடந்த டெஸ்ட் போட்டிக்கு பின் தனது மனைவியை பார்க்க ஸ்மித் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அப்போது ஸ்மித் பெரிய அளவில் தனது குடும்பத்தோடு பேசவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களுக்கு இடையில் நிறைய மனஸ்தாபம் நிலவி வருவதாக தகவல்கள் வருகிறது .

Story first published: Friday, January 1, 2021, 10:24 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+