For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தொடர் அவமானம்.. இந்திய பவுலர்களை வச்சு செய்த ஆஸி. ஜாம்பவான்.. ஷாக்கில் உறைந்த பும்ரா , அஸ்வின்!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர் ஸ்மித் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அதிரடியாக ஆடிய ஸ்மித் சதம் அடித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தொடரில் முன்னிலை வகிக்க போகும் அணி எது என்பதை மூன்றாவது டெஸ்ட் தீர்மானிக்கும் என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

மூன்றாவது டெஸ்டின் முதல்நாள் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. இந்த நிலையில் இன்று பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

எப்படி

எப்படி

இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் வீரர் ஸ்மித் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இந்தியாவிற்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் ஸ்மித்தில் மோசமாக ஆடினார். ஒற்றை இலக்க ரன்னில் முதல் இரண்டு போட்டியிலும் ஸ்மித் அவுட்டானார்.

ஒரு ரன்

ஒரு ரன்

முதல் டெஸ்டில் இவர் 1, 1 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்டில் ஸ்மித் 0, 8 ரன்கள் எடுத்தார். இரண்டு முறை அஸ்வின் ஓவரில் ஸ்மித் அவுட் ஆனார். ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறி வந்தார். என்னால் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று ஸ்மித் வெளிப்படையாக அறிவித்தார். இதனால் ஸ்மித்தை பலரும் கிண்டல் செய்து அவமானப்படுத்தினார்கள் .

பார்ம்

பார்ம்

இந்த நிலையில் ஸ்மித் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் ஸ்மித் மீண்டும் பழைய பார்மிற்கு திரும்பி உள்ளார். இதனால் இந்திய பவுலர்கள் ஸ்மித்திற்கு பவுலிங் செய்ய முடியாமல் கடுமையாக திணறி வருகிறார்கள். ஸ்மித் வந்ததும் அஸ்வினை களமிறக்கி ரஹானே சோதனை செய்தார்.

அஸ்வின்

அஸ்வின்

ஆனால் அஸ்வின் பந்தை தொடாமல் ஸ்மித் மிகவும் பாதுகாப்பாக ஆடினார். அஸ்வின் பவுலிங்கில் மிகவும் பாதுகாப்பாக ஆடிய ஸ்மித் அதன்பின் சிராஜ், சைனி பவுலிங்கில் அதிரடி காட்டினார். அதிலும் சைனி பவுலிங் வந்த போதெல்லாம் ஸ்மித் பவுண்டரி அடித்தார்.

திணறல்

திணறல்

இவருக்கு அனைத்து விதமான பந்துகளையும் இந்திய பவுலர்கள் வீசி பார்த்தனர். ஆனாலும் ஸ்மித் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. கடந்த வருடம் ஸ்மித் எந்த பார்மில் இருந்தாரோ அதே பார்மில் இன்றும் ஆடினார். அதிலும் ஸ்மித் பேட்டிங் நின்ற விதம், ஷாட்களை தேர்வு செய்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது.

 பும்ரா

பும்ரா

அஸ்வின், பும்ராவால் கூட இன்று ஸ்மித்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிரடியாக ஆடிய ஸ்மித் சதம் அடித்து, தொடர்ந்து ஆடி வருகிறார். கடந்த சில போட்டிகளாக சரியான ரிதம் இல்லாமல் திணறி வந்த ஸ்மித் மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளார். இதனால் மீதம் இருக்கும் டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஸ்மித் இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, January 8, 2021, 9:02 [IST]
Other articles published on Jan 8, 2021
English summary
Australian batsman Steve Smith gets back to form against India in the third test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+