For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: என்ன இது..? இவ்வளவு பெரிய பந்து.. ஆனாலும் பவுண்டரிக்கு அனுப்பிய அவர்..! ரசிகர்கள் குஷி

ஓல்டு டிராபோர்டு: களத்தில் நின்ற ஸ்டீவ் ஸ்மித், பலத்த காற்று வீசிய போது உருண்டு வந்த பீச்பாலை பவுண்டரிக்கு அனுப்பி, ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்.

பரம வைரிகளான, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பரபரப்பான ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. 4வது டெஸ்ட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

Steve smith hits a beach ball to boundary in ashes series, goes viral

3வது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ளாத சாதனை வீரர் ஸ்மித் மீண்டும் இந்த போட்டியில் களம் கண்டார். ஏன் என்றால், 2வது போட்டியின்போது ஆர்ச்சர் வீசிய பந்தில் மூலம் பலமாக தாக்கப்பட்ட ஸ்மித் ஓய்வுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணி வார்னர் விக்கெட்டை விரைவில் இழந்தது. 4வது விக்கெட்டுக்கு ஸ்மித் களமிறங்கினார். தொடக்கத்தில் வெகு நிதானமாக மட்டை பிடித்த அவர், ஒரு கட்டத்தில் காட்டடி அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

30 ரன்களை அவர் எட்டிய போது, போட்டியின் நடுவே காற்று பலமாக வீசியது. அதனால் ரசிகர்கள் இடையே இருந்த பீச் பால் ஒன்று மைதானத்தின் நடுவில் உருண்டு வந்தது. அப்போது அதனை கண்ட ஸ்மித் ஒரு காரியம் செய்தார்.

தமது பேட்டால் அந்த பெரிய பந்தை ஸ்வீப் ஷாட் செய்து, அடித்து அனுப்பினார். அந்த பந்து நேராக பவுண்டரிக்கு சென்றது. அவரது இந்த செய்கையை கண்டு, மைதானத்தில் இருந்த ரசிகர்கள், ஆரவாரம் எழுப்பி கொண்டாடினர். இணையத்தில் அவரின் இந்த வீடியோ, வைரலாகி இருக்கிறது.

Story first published: Friday, September 6, 2019, 13:21 [IST]
Other articles published on Sep 6, 2019
English summary
Steve smith hits a beach ball to boundary in ashes series, goes viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+