கோலி பெஸ்ட் தாங்க…!! ஆனா இவர பாருங்க.. வேற லெவல்..!! புகழ் புராணம் பாடும் ஆஸி. கோச்
Recommended Video
பர்மிங்ஹாம்: உலகின் சிறந்த பேட்ஸ்மேனான கோலிக்கு இணையாக விளையாடுவது ஸ்டீவ் ஸ்மித் ஒருவர் தான் என்று ஆஸி. அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் இரு இன்னிங்சிலும் சதம் அடித்து, வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் ஸ்டீவ் ஸ்மித்.
இந்நிலையில் பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: ஸ்டீவ் ஸ்மித் தனது கிரிக்கெட் வாழ்க்கையை ஒரு சுழற்பந்து வீச்சாளராக தொடங்கினார். பின்னர் சிறந்த பேட்ஸ்மேனாக மாற்றிக் கொண்டார்.

சுழற்பந்துவீச்சாளர்
என்னிடம் வரும் போது லெக் ஸ்பின்னராகதான் வந்தார். அதிலும் வழக்கத்துக்கு மாறான பாணியில் பந்து வீசுபவராக இருந்தார். அதன் பிறகு பந்து வீச்சாளராக இருக்க விருப்பவில்லை.

மாறி விட்டார்
தலை சிறந்த பேட்ஸ் மேனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். தம்மை முழுவதுமாக மாற்றிக் கொண்ட கோலிக்கு இணையான பேட்ஸ்மெனாக மாறி இருக்கிறார்.

மனவலிமை
ஆனால் தற்போது பர்மிங்கா மில் ஸ்டீவ் ஸ்மித் விளையாடிய விதம் வேறு ஒரு வகை. அந்த ஆட்டத்தில் தனது மன வலிமை, சிறந்த பண்புகளை அவர் அற்புதமாக வெளிக் கொணர்ந்தார்.

3வது இடத்துக்கு முன்னேற்றம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசியவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். அதன் பிறகு வெளியிடப்பட்ட ஐசிசி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புஜாராவை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்துக்கு முன்னேறினார்.


Click it and Unblock the Notifications