Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு ரன்னில் டபுள் சதம் மிஸ்.. பரிதாப வீரர்கள் பட்டியலில் 8வதாக இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

கிங்ஸ்டன்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 199 ரன்களில் இதுவரை 7 பேர் அவுட் ஆகியிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 8வதாக அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே வெஸ்ட் இண்டீசில் டெஸ்ட் போட்டி தொடர் நடந்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டன், சபினா பார்க் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. இந்த போட்டியின் 2வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது.

Steve Smith joins 199-run club; Here is the full list

இந்த போட்டியில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், 199 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜெரோம் டைலர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதனால் ஒரு ரன்னில் இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

361 பந்துகளில், 21 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உதவியுடன் ஸ்மித் இந்த ரன்களை சேர்த்திருந்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 7 பேட்ஸ்மேன்கள்தான் 199 ரன்களில் அவுட் ஆகியுள்ளனர். ஸ்மித் 8வதாக அந்த வரிசையில் இணைந்தார்.

3வது நடுவரிடம் ரிவ்யூ செய்தும், ஸ்மித் அவுட் உறுதி செய்யப்பட்டது இதில் சோகம்.

இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 199 ரன்களில் அவுட்டானவர்கள் விவரம்:

1984ம் ஆண்டு, முடாசர் நாசர் (பாகிஸ்தான்), இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்.

1986ம் ஆண்டு, முகமது அசாரூதின் (இந்தியா), இலங்கைக்கு எதிராக.

1997ம் ஆண்டு, மேத்யூ எல்லியட் (ஆஸ்திரேலியா), இங்கிலாந்துக்கு எதிராக.

1997ம் ஆண்டு, சனத்ஜெயசூர்யா (இலங்கை), இந்தியாவுக்கு எதிராக.

1999ம் ஆண்டு, ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா), வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக.

2006ம் ஆண்டு யூனிஸ்கான் (பாகிஸ்தான்), இந்தியாவுக்கு எதிராக.

2008ம் ஆண்டு இயான் பெல் (இங்கிலாந்து), தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக.

Story first published: Saturday, June 13, 2015, 13:47 [IST]
Other articles published on Jun 13, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+