Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொடரை சமன் செய்து விடுவோம்.. இந்தியாவை வீழ்த்தியது இப்படி தான்.. கேப்டன் ஸ்மித் கருத்து

இந்தூர் : இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான விஷயம். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி மூன்றே மூன்று டெஸ்ட் போட்டிகளில் தான் தோல்வியை தழுவி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி இருக்கிறது. அதுவும் பூஜ்ஜியத்திற்கு இரண்டு என்று பின்தங்கிய நிலையில் , இது நிகழ்ந்திருக்கிறது.

கேப்டன் பேட் கம்மின்ஸ், பந்து வீச்சாளர்கள் ஜோஸ் ஹேசெல்வுட், டேவிட் வார்னர் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

பாராட்டு

பாராட்டு

இதுகுறித்து பேசிய தற்காலிக ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், எங்களுடைய ஒவ்வொரு செயலும் அணியின் வெற்றிக்காக உதவி இருக்கிறது என நான் நினைக்கிறேன். முதல் நாளில் நாங்கள் டாசை இழந்து முதலில் பந்து வீச நேரிட்டது. எங்களுடைய பந்துவீச்சாளர்கள் களத்திற்கு ஏற்றார் வகையில் சரியான இடத்தில் பந்து வீசி இந்தியாவை கடும் நெருக்கடிக்கு ஆளாக்கினார்கள். முதல் நாளில் மேத்யூ குஹான்மேன் சிறப்பாக பந்து வீசி அசத்தினார்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றிக்கு பங்காற்றினார்கள். உஸ்மான் கவாஜா முதல் டெஸ்டில் நன்றாக விளையாடினார். இந்த தொடரில் அவர் எங்களுக்கு முக்கிய பங்காற்றி வருகிறார். இந்திய அணியும் நேற்று சிறப்பாக விளையாடி பதிலடி கொடுத்தார்கள். நாங்கள் கடினமாக முயற்சி செய்த பிறகு எங்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. புஜாரா ஆட்டம் பிரமிக்க வைத்தது. அவர் விளையாடிய போது நாங்கள் விக்கெட்டுகள் எடுக்க முடியாமல் தடுமாறினோம்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

எனினும் லயான் வீழ்த்திய எட்டு விக்கெட்டுகள் அவருடைய திறமைக்கு கிடைத்த பரிசாக நான் நினைக்கிறேன். எங்கள் பந்துவீச்சாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டது வெற்றிக்கு காரணம். இந்த போட்டியில் எங்களுடைய செயல்பாடு திருப்தி அளிக்கும் வகையில் முழுமையாக இருந்தது. இந்த நேரத்தில் நாங்கள் எங்களுடைய கேப்டன் பேட் கம்மிண்சை நினைக்கிறோம். எங்களுடைய நினைவு, பிரார்த்தனை எல்லாம் அவருடன் இருக்கிறது. எனக்கு அணியை வழிநடத்துவது என்பது மிகவும் பிடிக்கும்.

இடம் கிடைத்தது

இடம் கிடைத்தது

நான் ஜாலியாக தான் இந்தப் பணியை செய்து வருகிறேன். இந்தியாவில் ஆடுகளம் எப்படி இருக்கும் என்று எனக்கு மிகவும் நன்றாக தெரியும்.

ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு மாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற நாடுகளில் ஆடுகளங்கள் இதுபோன்று இருக்காது. ஒரு கேப்டனாக இந்த இந்தப் பணியை திருப்திகரமாக செய்தேன் என்று நினைக்கிறேன். அடுத்த டெஸ்ட் போட்டியில் எந்த மாதிரியான ஆடுகளம் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து இருக்கிறோம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எங்களுக்கு ஒரு இடம் கிடைத்து விட்டதை நினைத்து பெருமையாக நினைக்கிறோம்.

சமன் செய்வோம்

சமன் செய்வோம்

இதே போன்ற ஒரு செயல்பாட்டை கடைசி டெஸ்டிலும் வெளிப்படுத்தி தொடரை சமன் செய்ய முயற்சி செய்வோம் என ஸ்மித் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் அடுத்த வாரம் வியாழக்கிழமை தொடங்குகிறது.

Story first published: Friday, March 3, 2023, 13:52 [IST]
Other articles published on Mar 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+