For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்மித் 937.. கோலி 903.. முடிஞ்சா தொடுங்க கேப்டன்.. கோலிக்கு சவால் விடும் டெஸ்ட் மேட்ச் கிங்!

Recommended Video

கோலியின் சாதனைகளை அடிச்சு நொறுக்கிய ஸ்மித்

துபாய் : ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் போட்டிகள் பேட்ஸ்மேன்கள் தவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தன் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

ஆஷஸ் தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஐசிசி டெஸ்ட் போட்டிகள் தரவரிசையை வெளியிட்டது.

அதில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் கடந்த சில வாரங்கள் முன்பு கோலியை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்த ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். மேலும், கோலியை விட வேகமாக முன்னேறியும் உள்ளார்.

பேட்ஸ்மேன்கள் தரவரிசை

பேட்ஸ்மேன்கள் தரவரிசை

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ஆஷஸ் தொடருக்கு முன் 857 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருந்த அவர், நான்கே டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்தார்.

கோலி இரண்டாம் இடம்

கோலி இரண்டாம் இடம்

இந்திய அணியின் விராட் கோலி டெஸ்ட் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் 903 புள்ளிகள் பெற்று இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித்திடம் கடந்த வாரம் தன் முதல் இடத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

34 புள்ளிகள் வித்தியாசம்

34 புள்ளிகள் வித்தியாசம்

தற்போது இருவருக்கும் இடையே 34 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. இந்தியா அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆட உள்ள நிலையில், கோலி, இதே தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித்தை முந்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்டீவ் ஸ்மித் தடை

ஸ்டீவ் ஸ்மித் தடை

ஸ்டீவ் ஸ்மித் தடையில் சென்ற போது அவரது முதல் இடத்தை தட்டிப் பறித்தார் கோலி. அதுவரை டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை பெற முடியாமல் இருந்த நிலையில் ஸ்மித் தடையை பயன்படுத்திக் கொண்டார் கோலி.

மறைமுக சவால்

மறைமுக சவால்

அதை பாதி ஆஷஸ் டெஸ்ட் தொடரிலேயே திரும்ப எடுத்துக் கொண்டார் ஸ்மித். ஆஷஸ் தொடரில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அவர் 774 ரன்கள் குவித்து சிறந்த பேட்ஸ்மேன் என கூறப்படும் விராட் கோலிக்கு மறைமுக சவால் விட்டுள்ளார்.

மற்ற பேட்ஸ்மேன்கள்

மற்ற பேட்ஸ்மேன்கள்

இதே பட்டியலில் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், புஜாரா நான்காம் இடத்திலும் தொடர்கின்றனர். இவர்கள் இருவரும் தாங்கள் கடைசியாக ஆடிய டெஸ்ட் தொடரில் ரன் எடுக்காமல் சொதப்பினர்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசை

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் முதல் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் ரபாடா இரண்டாம் இடத்திலும், பும்ரா மூன்றாம் இடத்திலும் இருக்கின்றனர்.

பும்ரா அதே இடம்

பும்ரா அதே இடம்

பும்ரா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விக்கெட் வேட்டை நடத்தியதன் மூலம், தரவரிசையில் மூன்றாம் இடம் பிடித்து இருந்தார். வெறும் 12 போட்டிகளிலேயே மூன்றாம் இடத்தை பிடித்து கிரிக்கெட் உலகை வியப்பில் ஆழ்த்தி இருந்தார் பும்ரா.

வீரர்கள் முன்னேற்றம்

வீரர்கள் முன்னேற்றம்

ஆஷஸ் தொடரில் ஆடிய பல இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்கள் தரவரிசையில் முன்னேற்றம் கண்டனர். பேட்ஸ்மேன்களில் இங்கிலாந்து வீரர்கள் ஜோஸ் பட்லர் 27வது இடத்திற்கும், பர்ன்ஸ் 56வது இடத்திற்கும், டென்லி 57வது இடத்திற்கும் முன்னேறினர். ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேடு 78வது இடத்திற்கு முன்னேறினார்.

முன்னேறிய பந்துவீச்சாளர்கள்

முன்னேறிய பந்துவீச்சாளர்கள்

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களில் ஜோப்ரா ஆர்ச்சர் 37வது இடத்திற்கும், ஜாக் லீச் 39வது இடத்திற்கும், சாம் கர்ரன் 65வது இடத்திற்கும் முன்னேறினர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் மார்ஷ் 54வது இடத்திற்கு முன்னேறினார்.

Story first published: Monday, September 16, 2019, 17:06 [IST]
Other articles published on Sep 16, 2019
English summary
Steve Smith leads Virat Kohli by 34 points in ICC test batting ranking
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+