Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மாட்டிக்கிட்டியே பங்கு.. மனைவிக்கு பதிலாக வேறு பெண்ணுக்கு காதலர் தின வாழ்த்து.. சிக்கிக்கொண்ட ஸ்மித்

நாக்பூர்: ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித், காதலர் தினத்திற்காக தனது மனைவிக்கு வாழ்த்துக்கூறுவதாக நினைத்து பிரச்சினையில் சிக்கிக்கொண்டதால் ரசிகர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்துள்ளனர்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வயது வரம்புகள் இன்றி அனைவருமே தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

இந்த கொண்டாட்டத்தில் பிரபலங்களும் விதிவிலக்கு இல்லை. சினிமா நட்சத்திரங்கள் முதல் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் வரை பலரும் காதலர் தினம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

 ஸ்மித்தின் வாழ்த்து பதிவு

ஸ்மித்தின் வாழ்த்து பதிவு

அந்தவகையில் தான் ஸ்டீவ் ஸ்மித்தும் மாட்டிக்கொண்டுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் உள்ள அவர் தனது மனைவிக்கு வாழ்த்துக்கூற நினைத்துள்ளார். அதற்காக ட்விட்டரில் என்னுடைய அழகான மனைவி டேனி வில்லீஸுக்கு காதலர் தின வாழ்த்துகள். உன்னை காணாமல் இருக்க முடியவில்லை. சிறிது நாட்களில் காண ஆவலுடன் காத்துள்ளேன் என மிகவும் அழகாக தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

வேடிக்கை சம்பவம்

வேடிக்கை சம்பவம்

இந்நிலையில் அவர் டேக் செய்த நபர் தான் தவறாக சென்றுள்ளது. ஸ்மித்தின் மனைவி டேனி வில்லீஸ், "Dani_willis" என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ளார். ட்விட்டரில் இந்த பெயரில் டி. குயீன் என்ற வேறு ஒரு நபர் தான் இருக்கிறார். இதனை யோசிக்காத ஸ்மித், தவறுதலாக அந்த பெண்ணிற்கு தனது காதலர் தின வாழ்த்தை கூறிவிட்டார். இதனால் ரசிகர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்துள்ளனர்.

திருமண வாழ்வு

திருமண வாழ்வு

ஆஸ்திரேலியாவின் முன்னணி வீரராக வலம் வரும் ஸ்மித் கடந்த 2011ம் ஆண்டு டேனி வில்லீஸை சந்தித்தார். சுமார் 8 ஆண்டுகளாக காதல் வாழ்க்கையில் இருந்த இந்த நட்சத்திர ஜோடி, 2018ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். 15 நாட்களுக்கும் மேலாக ஸ்மித்தை பார்க்காமல் உள்ள டேனி வில்லீஸ், இந்தியாவுக்கு விரைவில் டேனி வில்லீஸ் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்மித்தின் ஆட்டம்

ஸ்மித்தின் ஆட்டம்

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் மட்டுமே ஒரே நம்பிக்கையாக இருக்கிறார். முதல் டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 62 ரன்களை அடித்தார். அதுவும் 2வது இன்னிங்ஸில் நாட் அவுட்டாகும். இந்தியாவில் இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 722 ரன்களை குவித்துள்ளார். இதில் ஒரு அரைசதமும், 3 சதங்களும் அடங்கும்.

Story first published: Tuesday, February 14, 2023, 17:11 [IST]
Other articles published on Feb 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+