Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அடடே.. நம்ம ஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்னைக்கு கல்யாணம்.. வாழ்த்துக்கள் சகோ

சிட்னி : ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. தன் நீண்ட நாள் தோழியான டேனி வில்லிஸ் உடன் அவரது திருமணம் நடந்தது.

கடந்த ஆண்டு ஜூலை 2017ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித், டேனி வில்லிசை திருமணம் செய்ய விரும்புவதாக கூறி நிச்சய மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். அதன் பின் இவர்கள் திருமணம் உறுதியாகி உள்ளது.

Steve smith married his girlfriend Dani willis on september 15, 2018

தற்போது திட்டமிட்டபடி திருமணம் நடைபெற்றுள்ளது. டேனி வில்லிஸ் சட்டத்துறையில் மாணவராக உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் தடை செய்யப்பட்ட போதும் அவருக்கு ஆதரவாக, ஆறுதலாக இருந்தார் இவர்.

இந்த திருமணத்திற்கு வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களின் விவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், பாட் கம்மின்ஸ் மற்றும் மொய்செஸ் ஹென்ரிக்ஸ் ஆகியோர் ஸ்மித் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்டீவ் ஸ்மித் இன்னும் ஐந்து மாதங்கள் தடை காலத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. அதன் பின் அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் கனடா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டு டி20 தொடர்களில் ஸ்மித் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீவ் ஸ்மித் நல்லபடியாக கிரிக்கெட்டுக்கு திரும்ப வேண்டும், நம் கோலிக்கு போட்டியாக ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே நம் ஆசை. இந்த திருமணத்தில் இருந்து அவர் வாழ்வில் நல்லது நடக்க நம் வாழ்த்துக்கள்.

Story first published: Saturday, September 15, 2018, 16:50 [IST]
Other articles published on Sep 15, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+