Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனஅழுத்தத்தில் இருக்கிறார்.. அவருக்கு உடனே ஓய்வு தேவை.. இந்திய தொடரால் ஆஸி. அணிக்குள் பரபரப்பு!

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித் மனரீதியான அழுத்தத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மிக முக்கியமான வீரர் ஸ்டீவ் ஸ்மித். ஒருநாள் போட்டிகளில் அவ்வப்போது சொதப்பினாலும் கூட டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் மிக சிறப்பான வீரர்.

ஆனால் கடந்த சில நாட்களாக டெஸ்ட் போட்டிகளிலும் ஸ்மித் சொதப்ப தொடங்கி உள்ளார். இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித் மிக மோசமான பார்மில் உள்ளார்.

பார்ம்

பார்ம்

இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடி உள்ள இரண்டு டெஸ்ட் போட்டியிலும் ஸ்மித் மோசமாகவே ஆடினார். முதல் டெஸ்டில் இவர் 1, 1 ரன்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்டில் ஸ்மித் 0, 8 ரன்கள் எடுத்தார்.

எப்படி

எப்படி

இரண்டு முறை அஸ்வின் ஓவரில் ஸ்மித் அவுட் ஆனார்.ஸ்பின் பவுலிங்கை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறார். என்னால் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று ஸ்மித் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

மோசம்

மோசம்

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித் மனரீதியான அழுத்தத்தில் இருக்க வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஸ்மித் மன ரீதியாக கஷ்டப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது. அவர் தனது குடும்ப உறுப்பினர்களை பார்த்து பல மாதம் ஆகிறது.

ஓய்வு

ஓய்வு

அவர் சரியாக ஓய்வு எடுத்து பல மாதங்கள் ஆகிறது. இதனால் மனரீதியாக அவர் கஷ்டப்பட வாய்ப்புள்ளது. இது அவரின் ஆட்டத்திலும் வெளிப்படுகிறது. அவர் தற்போது ஓய்வு எடுக்க வேண்டும். குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும்.

மேக்ஸ்வெல்

மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இதேபோன்ற சிக்கலில் தவித்து வந்தார். அது போன்ற சிக்கலை ஸ்மித் எதிர்கொண்டு வருகிறார். அவர் மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும் என்றால் சில நாட்கள் ஓய்வு எடுப்பது அவசியம் என்று அவருக்கு நெருக்கமான வட்டங்கள் தெரிவிக்கிறது.

Story first published: Friday, January 1, 2021, 11:19 [IST]
Other articles published on Jan 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+