Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா எனது 2வது வீடு.. அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்த உடன் கோபமானேன்.. ஆஸி. கேப்டன் ஸ்மித் பேச்சு

இந்தூர் : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தற்காலிக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் களமிறங்குகிறார். இந்த போட்டி நாளை காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இழந்த ஸ்மித் அடுத்தது என்ன செய்யப் போகிறோம் என்பது குறித்து பேசி உள்ளார்.

டெல்லி டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி வலுவான நிலையில் இருந்தும், 28 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து படுதோல்வியை சந்தித்தது குறித்தும் ஸ்மித் பேசி உள்ளார்.அவர் பேட்டியை தற்போது காண்போம்.

கோபம்

கோபம்

நான் 94 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடி இருக்கிறேன். இதில் பலமுறை நான் ஆட்டம் இழந்தவுடன் ஏன் இந்த தவறு செய்தோம் என்று யோசித்ததே கிடையாது. ஆனால் டெல்லி டெஸ்டில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தவுடன் எனக்கு என் மீது கோபம் வந்தது. என் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான ஷாட் ஆடி ஆட்டம் இழந்தது குறித்து நான் என்றும் யோசித்ததே கிடையாது.

டெல்லியில் நடந்தது நிச்சயமாக என் கிரிக்கெட் வாழ்க்கையில் நல்ல தருணம் கிடையாது.

பொறுமை வேண்டும்

பொறுமை வேண்டும்

நான் எதிர்பார்த்தது போல் டெல்லி டெஸ்டில் விளையாடவில்லை. இந்திய வீரர்கள் ரன் அடிக்க எதுவாக தான் பில்டர்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் நாங்கள் தான் வேகமாக விளையாடி விக்கெட்டுகளை இழந்து விட்டோம். டெல்லி டெஸ்டில் நாங்கள்தான் முன்னிலையில் இருந்தோம். எங்கள் கையே ஓங்கி இருந்தது. அந்த தருணத்தில் தேவையில்லாமல் அதிரடியாக விளையாடி பெரிய ரிஸ்குகளை எடுத்து தோல்வியை தழுவி விட்டோம். அந்த தருணத்தில் கொஞ்சம் பொறுமை காத்து விளையாடி இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கடினமாக இருக்கிறது

கடினமாக இருக்கிறது

இது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறோம். ரன் அடிக்க வாய்ப்பு இருந்தால் சிங்கிள் எடுத்து மறுமுனைக்கு செல்ல வேண்டும். இது இந்திய பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் வகையில் விளையாட வேண்டும். நாம் நெருக்கடியில் இருந்தால் ஆட்டத்தின் போக்கை துரிதப்படுத்தக் கூடாது. வேகமாக ஆடுகிறேன் என்று ஆட்டம் இழந்து விட்டால் அடுத்து விளையாடும் வீரர்களுக்கு இந்த சூழலை கையாள்வது மிகவும் கடினமாக மாறிவிடுகிறது. இந்தியாவில் இன்னிசை தொடங்குவது தான் கடினம்.

யாரும் இல்லை

யாரும் இல்லை

ஒரு முப்பது பந்துகளை நீங்கள் விளையாடி விட்டால் அதன் பிறகு பெரிய இன்னிங்ஸ் ஆடி ரன் சேர்த்து விடலாம். ஏதேனும் ஒரு பந்தில் ஆட்டம் இழந்து விடுவோம் என்ற நினைப்பு நமது மனதில் இருக்கக் கூடாது. நான் முதல் டெஸ்டில் 30 ரன்கள் எடுத்தேன். மார்னஸ் நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால் எங்களால் இதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தாலே ஆட்டத்தின் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும். பீட்டர் ஹாண்ட்ஸ்கோம்ப் இரண்டு இன்னிங்ஸிலும் நன்றாகவே விளையாடினார். ஆனால் அவருக்கு துணையாக யாருமே விளையாடவில்லை.

இரண்டாவது வீடு

இரண்டாவது வீடு

யாரேனும் ஒருவர் அவருடன் ஆதரவாக விளையாடினால், முதல் இன்னிங்சில் நாங்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் ரன் எடுத்திருப்போம். கேப்டனாக செயல்படும்போது நான் இன்னும் சிறப்பாகவே விளையாடி இருக்கிறேன். இந்தியா எனக்கு இரண்டாவது வீடு போன்றது. இங்கு நான் நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன். இந்திய ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும். மூன்றாவது டெஸ்டில் உள்ள சவாலை கேப்டனாக எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

Story first published: Tuesday, February 28, 2023, 13:48 [IST]
Other articles published on Feb 28, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+