Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலி Vs ஸ்மித் இடையே போட்டி.. யார் டெஸ்டில் கிங்.. ஸ்மித் சொன்ன பதில் என்ன தெரியுமா?

நாக்பூர் : இந்தியா ஆஸ்திரேலியா அணிக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தற்போது நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.

கடந்த 19 ஆண்டுகளாக இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா ஒருமுறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் முனைப்புடன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் தற்போது சிறந்த பேட்ஸ்மேன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கோலி Vs ஸ்மித்

கோலி Vs ஸ்மித்

விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த சில ஆண்டுகளாக அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசியாக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் ஸ்டீவன் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்ற போட்டியில் விராட் கோலியும் களம் இறங்கியுள்ளார்.

ஸ்மித் பதில்

ஸ்மித் பதில்

இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1742 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் சராசரியாக 72 ஆகும். விராட் கோலி இடையிலான போட்டி குறித்து ஸ்மித்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் எங்கள் இருவருக்கும் இடையே எந்த போட்டியும் இல்லை. அவரும் அதே போல் தான் நினைப்பார் என்று கருதுகிறேன். என்னை பொருத்தவரை நான் களத்திற்கு சென்று என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தி என் அணிக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ அதற்காக போராடுவேன்.

வெற்றி பெற வேண்டும்

வெற்றி பெற வேண்டும்

இந்த தொடரில் அதிக ரன்களை விளாசி எங்கள் அணியின் வெற்றிக்கு உதவ முயற்சி செய்வேன். அதுதான் என்னுடைய முக்கியமான குறிக்கோளாக இருக்கிறது. நான் யாருக்கு எதிராகவும் பேட்டிங் செய்யவில்லை. அதேபோல் நான் யாருடனும் என்னை ஒப்பிட்டுப் பார்ப்பதும் இல்லை. என்னுடைய வேலையை நான் சரியாக செய்து வெற்றி பெற்றால், எனக்கு அது போதுமானது. அதேசமயம் விராட் கோலி ஒரு மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். பந்துவீச்சாளர்களை அவர் எதிர்கொண்டு நெருக்கடி ஏற்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும் .

ஸ்மித் பாராட்டு

ஸ்மித் பாராட்டு

விராட் கோலியின் பெரிய பலமாகவே அதைதான் கருதுகிறேன். உலகத்தில் அனைத்து பகுதிகளிலும் ரன்களை அடித்திருக்கிறார். விராட் கோலி ஆடுகளத்தின் இரண்டு பக்கத்திலும் ரன்களை அடிக்கும் திறமை உடையவர். எப்போது அமைதி காக்க வேண்டும். எப்போது அதிரடியாக விளையாட வேண்டும் என்று விராட் கோலிக்கு நன்றாக தெரியும். விராட் கோலி இன்று நேற்று அல்ல நீண்ட காலமாகவே சிறப்பான வீரராக அனைத்து கிரிக்கெட்டிலும் விளங்கி வருகிறார்.

ஸ்மித்தின் ஆசை

ஸ்மித்தின் ஆசை

எங்களுக்கு எதிராக அவர் அதிக ரன் அடிக்கக்கூடாது என நான் நினைக்கிறேன். ஆனால் யாருக்கு தெரியும் அவர் விளையாடத் தொடங்கினால் யாரால் தடுக்க முடியும். விராட் கோலி நிச்சயம் உலகத்தின் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்று ஸ்மித் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை ஒரு முறை கூட விராட் கோலி இரட்டை சதம் அடித்ததில்லை.தற்போது அதற்கு நல்ல வாய்ப்பு ஏற்படவிருக்கிறது.

Story first published: Thursday, February 9, 2023, 14:41 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+