Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. !! கொரோனாவால் ஸ்மித்துக்கு அடிச்ச லக்..!!

அடிலெய்ட் : உலகம் முழுவதும் கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது, பலரின் வாழ்க்கையை பறித்துள்ளது.

திரைப்படம், விளையாட்டு என அனைத்து துறைகளுக்கும் கொரோனா சேர்த்து வேட்டு வைத்தது.

ஆனால் அதே கொரோனாவால் தமக்கு கிடைக்கவே கிடைக்காது என்று நினைத்த பழைய வாழ்க்கையை ஒரு பிரபலத்திற்கு மீண்டும், கொடுத்துள்ளது.

பகல் இரவு டெஸ்ட்

பகல் இரவு டெஸ்ட்

ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை தழுவிய நிலையில், அடிலெய்டில் 2வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. பகல் இரவு டெஸ்ட்டில் இதுவரை ஆஸ்திரேலியா தோல்வி பெற்றதே இல்லை.

கம்மின்ஸ்

கம்மின்ஸ்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்தப் போட்டிக்கு முந்தைய நாள் தான் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்தது. அதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாட் கம்மின்ஸ், கொரோனா உறுதியான நபருடன் தொடர்பில் இருந்தார் இதனால் அவருக்கும் பரவி இருக்கலாம் என்பதால் அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகி தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

சிக்கல்

சிக்கல்

இதனால் யாருக்கு கேப்டன் பதவி தருவது என்ற குழப்பம் ஏற்பட்டது. ஏனென்றால் கடந்த 2017-18 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா தொடரின் போது பந்தை சேதப்படுத்தியதில் முக்கிய பங்கு ஆற்றியதாக கூறி, கேப்டன் ஸ்மித், வார்னர் ஆகியோர் சிக்கினர். இதனால் இருவருக்கும் ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டதுடன், இனி இருவரும் கேப்டன் பதவியை வகிக்க முடியாது என்றும் தண்டனை விதிக்கப்பட்டது.

Recommended Video

Cummins to captain Australia, Smith is vice-captain | Ashes 2021-22 | Oneindia Tamil
வாய்ப்பு

வாய்ப்பு

இந்த நிலையில் கேப்டன் பொறுப்புக்கு வேறு ஆள் இல்லாததால் ஸ்மித்துக்கு அடிலெய்ட் டெஸ்ட்டில் மீண்டும் கேப்டனாக செயல்பட வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதனால் தாம் இனி கேப்டனாக களத்திற்கு வர முடியாது என்று நினைத்த ஸ்மித்துக்கு கொரோனாவால் லக் அடித்துள்ளது.இதனால் ஸ்மித் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Thursday, December 16, 2021, 15:00 [IST]
Other articles published on Dec 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+