அவன் மேட்ச் பத்தி நினைக்கவே கூடாது.. ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை மறைத்து வைத்த தந்தை!
Recommended Video

சிட்னி: ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை அவரது தந்தை, வீட்டில் கார் பார்க் செய்யும் இடத்தில் மறைத்து வைத்துள்ளார். இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது.
கிரிக்கெட் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஒருவருடம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர் கேமரூனுக்கு 9 மாதம் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் முழுக்க இனி வார்னர் கேப்டன், துணை கேப்டன் போன்ற தலைமை பொறுப்புகளை வகிக்க முடியாது. தற்போது இவர்கள் அவர்களது சொந்த வீட்டிற்கு திரும்பி இருக்கிறார்கள்.

கிளை போட்டிகள்
இந்த மூன்று வீரர்களும் இப்போது கிளப் போட்டிகள் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எந்த விதமான முதல்தர போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல் ஐபிஎல், பிசிஎல், பிக்பாஷ் போன்ற போட்டிகளிலும் இவர்கள் கலந்து கொள்ள முடியாது என்று கூறப்படுகிறது.

பிரச்சனை ஆகும்
இதில் ஸ்மித், வார்னர் ஆகிய வீரர்கள் மிகவும் அனுபவம் மிக்க வீரர்கள் என்றாலும், அவர்கள் மீண்டும் அணிக்கும் திரும்புவது கடினம். 1 வருட தடை முடிந்தாலும், சில முதல் தர போட்டிகள் விளையாட தங்களது பிட்னஸ், பார்மை நிரூபிக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணி இளம் வீரர்களை எடுக்கும் முனைப்பில் இருப்பதால், ஸ்மித் வந்தாலும், வார்னர் வருவது கடினமான விஷயம் ஆகும்.
ஸ்மித் தந்தை
இந்த நிலையில் ஸ்மித் வீட்டில் அவரது கிரிக்கெட் உபகரணங்களை அவரது தந்தை மறைத்து வைத்துள்ளார். ஸ்மித் பார்த்தால் எப்போதும் அதை பற்றியே நினைத்துக் கொண்டு இருப்பார் என்று இப்படி செய்துள்ளார். சில நாட்கள் கிரிக்கெட் குறித்து எதுவும் ஸ்மித் சிந்திக்க கூடாது என்று முடிவெடுத்து இருப்பதாக அவரது தந்தை கூறியுள்ளார்.
மன்னிக்க வேண்டும்
இது வீடியோவாக வெளியாகி இருக்கிறது. இதற்கு பலரும் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இவர் ''இது தவறு என்று தெரியும். ஆனாலும் ஸ்மித் மன்னிக்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications