Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மனைவியிடம் தோல்வி... சோகமான ஸ்டீவ் ஸ்மித்... வம்பிழுத்த டானி வில்லிஸ்

சிட்னி : கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் வீட்டிற்குள் முடங்கியுள்ளார்.

தன்னுடைய மனைவியுடன் போட்டியிட்டு வீடியோ கேம்ஸ்சில் அவர் தோல்வியுற்றதையடுத்து, அவரை வம்பிழுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவி டானி வில்லிஸ் பதிவிட்டுள்ளார்.

Steve Smiths Wife Trolls Him After Defeating Him In Video Games

வீடியோ கேம்ஸ் விளையாடியது சந்தோஷமா என்று அவர் கலாய்க்க, இல்லை என்றும் தான்தான் கேம்சில் தோற்றுவிட்டேனே என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் விளையாட்டு வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். ஆஸ்திரேலியாவிலும் கிரிக்கெட் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினருடன் அவர்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வீட்டில் உள்ள ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய மனைவி டானி வில்லிசுடன் மரியோ கார்ட் என்ற வீடியோ கேம்சை விளையாடி தோற்றுள்ளார். இதையடுத்து அவரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் வில்லிஸ் வம்பிழுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Steve Smiths Wife Trolls Him After Defeating Him In Video Games

அந்த வீடியோவில், ஸ்டீவ், என்ன உனக்கு சந்தோஷமா என்று கேட்கிறார் வில்லிஸ். அதற்கு ஸ்மித் இல்லை என்று பதில் கூற, ஏன் என்று வில்லிஸ் கேட்க, நான் தான் தோற்றுவிட்டேனே என்று பதிலளிக்கும்படியாக செல்கிறது அந்த வீடியோ.

Steve Smiths Wife Trolls Him After Defeating Him In Video Games

ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இதுவரை ஐபிஎல்லில் 81 போட்டிகளில் விளையாடி, 2022 ரன்களை குவித்துள்ள ஸ்மித், 37.44 சராசரியும், 128.95 ஸ்டிரைக் ரேட்டும் கொண்டுள்ளார். ஒரு சதமும் 8 அரைசதமும் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் கோலியை பின்னுக்கு தள்ளிவிட்டு 911 புள்ளிகளுடன் ஸ்மித் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, April 24, 2020, 14:36 [IST]
Other articles published on Apr 24, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+