Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லா நல்லாத்தான் போய்க்கிட்டிருக்கு… ஆனா… நான் கிளம்புறேனே.. மருகி, உருகி கதறும் அந்த கேப்டன்

பெங்களூரு:அணி முக்கியமான கட்டத்தில் இருக்கும் போது நான் சொந்த நாட்டுக்கு திரும்புவது வருத்தமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரின் 49வது போட்டி நேற்றிரவு 8 மணிக்கு துவங்க வேண்டிய போட்டி மழையின் காரணமாக 11.26 மணிக்கு துவங்கியது. போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியும் மோதின.

மழையின் குறுக்கீடு காரணமாக போட்டி தாமதமாக துவங்கியதால் போட்டி 20 ஓவர்களில் இருந்து 5 ஓவர்களாக குறைக்கப்பட்டது. பின்னர் முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களை அடித்தது.

கோபால் ஹாட்ரிக்

கோபால் ஹாட்ரிக்

கோலி 7 பந்துகளில் 25 ரன்களை குவித்தது. டிவில்லியர்ஸ் 4 பந்துகளில் 10 ரன்களை அடித்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஷ்ரேயாஸ் கோபால் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

மழையால் கைவிடல்

மழையால் கைவிடல்

பின்னர் 63 ரன்கள் என்ற இலக்குடன் ஆட ஆரம்பித்த ராஜஸ்தான் அணி 3.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்களை குவித்திருக்கும்போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

தொடர்ந்த தோல்வி

தொடர்ந்த தோல்வி

அதனால் முதல் அணியாக பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது. போட்டி முடிந்து ராஜஸ்தான் அணி குறித்து பேசிய ஸ்மித் கூறியதாவது: ராஜஸ்தான் அணியில் நான் இணைந்தபோது எங்கள் அணி வரிசையாக தோல்வியை கண்டு கொண்டிருந்தது.

வென்றது மகிழ்ச்சி

வென்றது மகிழ்ச்சி

அதன் பின்னர் குறைந்த போட்டிகள் உள்ள நிலையில் நான் கேப்டன் பொறுப்பினை ஏற்றேன். 3 போட்டிகளில் 2ல் வென்றோம். அந்த இரண்டு போட்டிகளிலும் எனது பங்களிப்பு இருந்தது மகிழ்ச்சி.

மனதுக்கு கஷ்டம்

மனதுக்கு கஷ்டம்

மேலும், தொடரின் இறுதி கட்டத்தில் இருக்கும்போது நான் அணியில் இருந்து விலக உள்ளேன். இருப்பினும் எங்களது அணி நிச்சயம் வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். எல்லாம் நன்றாக போய்க்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நான் செல்வது மனதிற்கு கஷ்டமாக உள்ளது என்று ஸ்மித் கூறினார்.

Story first published: Wednesday, May 1, 2019, 13:17 [IST]
Other articles published on May 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+