எந்த பவுலரும் என்னை இப்படி கட்டுப்படுத்தியது இல்லை.. ஸ்மித்தை புலம்ப விட்ட தமிழக வீரர்.. என்னாச்சு?
சிட்னி: இந்தியாவிற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலும் சரியாக ஆடாமல் அவுட்டாகியது குறித்து ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடியாக ஆடி வெற்றிபெற்றுள்ளது. முக்கியமாக தமிழக வீரர் அஸ்வின் இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்.
முதல் இன்னிங்சில் 3 விக்கெட், இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் என்று அஸ்வின் அசத்தினார். அஸ்வினின் ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடுமையாக திணறினார்.

பேட்டி
இந்த நிலையில் அஸ்வினின் பவுலிங் குறித்து ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேட்டி அளித்துள்ளார். அதில் இந்திய வீரர் அஸ்வினுக்கு எதிராக நான் நன்றாக ஆடி இருக்க வேண்டும். ஆனால் என்னால் முடியவில்லை. அஸ்வினுக்கு நான் கொஞ்சம் பிரஷர் கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது.

கட்டுப்படுத்தினார்
அஸ்வின்தான் என்னை கட்டுப்படுத்தினார். இரண்டு இன்னிங்சிலும் அவர்தான் என்னை கட்டுப்படுத்தினார். எந்த ஒரு ஸ்பின் பவுலரும் என்னை இப்படி கட்டுப்படுத்தியது இல்லை.

ஸ்பின்
நான்தான் ஸ்பின் பவுலர்களை கட்டுப்படுத்தி இருக்கிறேன். ஸ்பின் பவுலர்களிடம் நான் எப்போதும் ஆக்ரோஷமாக இருந்து இருக்கிறேன். ஆனால் அஸ்வினிடம் முடிவில்லை.

ஆக்ரோஷம்
இந்த ஆட்டம் ஒரு இரண்டு பக்க கத்தி. எனக்கு இப்போதுதான் கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கிறது. களத்தில் இன்னும் கொஞ்ச நேரம் கூடுதலாக இருந்து இருக்கலாம். அதுதான் முக்கியம். ஆனால் அது முடிவதில்லை.

அடுத்த போட்டி
அடுத்த போட்டியில் என் ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இன்னும் கொஞ்சம் நம்பிக்கையாக ஆட வேண்டும். அடுத்த போட்டியில் என்னுடைய ஆட்டத்தை நான் மெருகேற்றுவேன் என்று நம்புகிறேன், என்று ஸ்மித் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications