For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டெஸ்ட் கேரியர்லயே இவ்வளவு மோசமா இதுவரைக்கும் ஸ்மித் ஆடினதில்ல... நிகழ்த்தி காட்டிய அஸ்வின்!

அடிலெய்ட் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு போட்டியின் 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் தனது முக்கியமான 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தற்போது நிதானமாக ஆடி வருகிறது.

இந்த போட்டியில் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தன்னுடைய டெஸ்ட் கேரியரில் இதுவரை இந்தளவிற்கு மோசமான ரன்னை அவர் எடுத்ததில்லை.

ஆஸி நிதான ஆட்டம்

ஆஸி நிதான ஆட்டம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தன்னுடைய முதல் இன்னிங்சை 244 ரன்களில் முடித்துக் கொண்டது. இதையடுத்து தற்போது ஆஸ்திரேலிய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

ஸ்மித் ஒரு ரன்னில் அவுட்

ஸ்மித் ஒரு ரன்னில் அவுட்

இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்பின்னர் ஆர். அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முக்கியமாக ஸ்டீவ் ஸ்மித்தை அவர் ஒரு ரன்னில் அவுட்டாக்கியுள்ளார். ஸ்மித்தின் சர்வதேச டெஸ்ட் கேரியரில் இதுவரை இந்தளவுக்கு மோசமான ரன்னை எடுத்ததில்லை.

சாத்தியப்படுத்திய அஸ்வின்

சாத்தியப்படுத்திய அஸ்வின்

இதை சாத்தியப்படுத்தியுள்ளார் இந்திய ஸ்பின்னர் அஸ்வின். அவரது முதல் ஓவரில் ஸ்மித்தை ரன் அவுட் ஆக்குவதற்கான ஒரு முயற்சி தோற்ற நிலையில், அடுத்த ஓவரிலேயே ஸ்மித்தை அவுட்டாக்கியுள்ளார். 50 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை விளையாடியுள்ள ஸ்மித் எடுத்துள்ள மிகவும் மோசமான ரன் இது.

2013ல் 5 ரன் எடுத்த ஸ்மித்

2013ல் 5 ரன் எடுத்த ஸ்மித்

முன்னதாக இந்தியாவிற்கு எதிராக மொகாலியில் கடந்த 2013ல் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்மித் 5 ரன்களுக்கு அவுட் செய்யப்பட்டிருந்தார். இந்தியாவிற்கு எதிராக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவரின் குறைந்த எண்ணிக்கையிலான ரன் இதுவாக இருந்தது. தற்போது அதை இந்தியாவே முறியடித்துள்ளது.

Story first published: Friday, December 18, 2020, 16:03 [IST]
Other articles published on Dec 18, 2020
English summary
Smith scored less than 5 runs for the first time against India in 21 Test innings
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+