Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்பா என்ன மனுஷன்யா.. கோலி செய்த உதவிக்கு ஸ்டீவ் ஸ்மித் செய்த சிறப்பான கைமாறு.. குவியும் பாராட்டு

டெல்லி: இந்திய கேப்டன் கோலி விடுப்பு எடுத்து இந்தியா திரும்பும் முடிவை ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மிட் பாராட்டி உள்ளார்.

கிரிக்கெட் உலகில் தற்போது மிகப்பெரிய போட்டியாளர்கள் என்று பார்த்தால் அது இந்திய அணியின் கேப்டன் கோலியும் ஆஸ்திரேலிய அணியின் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித்தும்தான். இரண்டு பேருமே உலகின் டாப் வீரர்களாக உள்ளனர்.

ஒரு காலத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த இரண்டு பேருமே தற்போது நெருங்கிய நண்பர்களாக மாறி உள்ளனர். முக்கியமாக ஸ்டீவ் ஸ்மித் கஷ்டப்பட்ட காலத்தில் கோலி அவருக்கு உதவியாக இருந்தார்.

ஜெண்டில்மேன்

ஜெண்டில்மேன்

உப்புத்தாள் சர்ச்சையால் தடை பெற்ற ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் விளையாட வந்த போது கிரிக்கெட் ரசிகர்கள் மூலம் கிண்டலுக்கு உள்ளானார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களாலும் கூட இவர் தொடக்கத்தில் கிண்டல் செய்யப்பட்டார். அப்போது விராட் கோலிதான் உள்ளே புகுந்து ஸ்டீவ் ஸ்மித்தை பாராட்டுங்கள் என்று இந்திய ரசிகர்களை கேட்டுகொண்டார்.

பாராட்டு

பாராட்டு

விராட் கோலியின் இந்த செயல் பெரிய வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது விராட் கோலிக்கு அதே போன்ற உதவியை ஸ்டீவ் ஸ்மித் செய்துள்ளார். கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்க உள்ளது. இதற்காக தற்போது கோலி விடுமுறை எடுத்துவிட்டு.. இந்தியா திரும்பி உள்ளார். கோலியின் இந்த முடிவை கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

தவறு

தவறு

கோலி செய்தது தவறு என்று சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் கோலிக்கு ஆதரவாக தற்போது ஸ்டீவ் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கோலி எடுத்த முடிவில் தவறு இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் தனது குடும்பத்தோடு இருக்க வேண்டும். தனது மனைவியோடு இருக்க வேண்டும்.

அழுத்தம்

அழுத்தம்

இந்தியா செல்லும் அவருக்கு நிறைய அழுத்தம் இருக்கும். அவரின் இந்த துணிச்சலான முடிவை பாராட்டுகிறேன். இப்படிப்பட்ட தருணங்களை கோலி மிஸ் செய்ய கூடாது. அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாராட்டு

பாராட்டு

அவர் தனது மனைவியோடு இருக்க வேண்டிய நேரம் இது. அவர் அதை செய்கிறார். எல்லாம் நன்றாக செல்லும் என்று நம்புகிறேன். அவருக்கும், அவரின் மனைவிற்கும் என்னடைய வாழ்த்துக்கள், என்று ஸ்டிவ் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார். பலர் கோலிக்கு எதிராக பேசிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித் அவருக்கும் ஆதரவாக பேசி உள்ளார்.

Story first published: Wednesday, December 23, 2020, 17:52 [IST]
Other articles published on Dec 23, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+