Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு பேரு புகாரா? கிரிக்கெட் பந்தில் லிப் ஸ்டிக் தடவி சேதப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்திற்கும் இடையில் ஆஷஸ் தொடர்க்கு பின் ஒருநாள் தொடர் நடந்து வந்தது. இந்த தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் ஆஸ்திரேலிய அணி மிகவும் சிறப்பாக விளையாடியது. ஆனால் ஆஷஸ் தொடரில் தோற்ற இங்கிலாந்து அணி இந்த போட்டியில் உக்கிரமாக ஆடியது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீது முக்கிய புகார் ஒன்று வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தி விட்டதாக கூறப்பட்டு உள்ளது.

தோல்வி

தோல்வி

இந்த போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது. அதன்பின் களம் இறங்கிய ஆஸ்திரேலியா மிகவும் வேகமாக ஆடியது. ஆனாலும் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பிரச்சனை

பிரச்சனை

இந்த போட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் பந்தை தன் உதட்டில் இருக்கும் சாயத்தை கொண்டு துடைத்து இருப்பார். இரண்டு முறை அவர் அப்படி செய்வார். இது அங்கு இருந்த கேமராவில் பதிவாகி ஒளிபரப்பாகி இருக்கிறது.

சர்ச்சை

சர்ச்சை

இந்த போட்டி முடிந்த பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவருக்கு இந்த வீடியோ போட்டு கட்டப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி பத்திரிக்கையாளர்கள் கேட்டார்கள். பந்தை ஏன் அப்படி சேதப்படுத்தினீர்கள் என்று அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

விளக்கம்

இதற்கு விளக்கம் அளித்த ஸ்டீவ் ஸ்மித் ''எனக்கு இதை பார்க்க சிரிப்பாக இருக்கிறது. என் உதட்டை பாருங்கள் எவ்வளவு வறண்டு போய் இருக்கிறது. நானா லிப் ஸ்டிக், லிப் பாம் எல்லாம் பயன்படுத்த போகிறேன். பந்தை வெள்ளையாக்குவதற்காக எச்சிலை தொட்டு துடைத்தேன்'' என்று காமெடியாக குறிப்பிட்டு இருக்கிறார்.

Story first published: Monday, January 22, 2018, 15:23 [IST]
Other articles published on Jan 22, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+