For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆகாகாகாகா... டெல்லி மார்க்கெட்டுக்குள் புகுந்து "சுச்சி" ரோலை ருசி பார்த்த ஸ்மித்

டெல்லி: ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் ஐபிஎல் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டெல்லியில் உள்ள கான் மார்க்கெட்டுக்கு விஜயம் செய்து அங்கு ஜப்பானிய உணவு வகையான சுச்சி ரோல்ஸை விரும்பி உண்டு மகிழ்ந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் முகாமிட்டுள்ளார் ஸ்மித். ஆஸ்திரேலிய கேப்டனா ஸ்மித், ரைசிங் புனே அணியின் கேப்டனாகவும் இருக்கிறார். இந்தத் தொடரோடு புனே அணியின் ஆயுள் காலம் முடிவடைகிறது.

நாளை புனே அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ளது புனே அணி. இந்த நிலையில் புகழ் பெற்ற கான் மார்க்கெட்டுக்கு நேற்று இரவு விஜயம் செய்தார் ஸ்மித்.

டவுன்ஹால் ஹோட்டலில்

டவுன்ஹால் ஹோட்டலில்

அங்குள்ள டவுன்ஹால் ரெஸ்டாரென்ட்டுக்குப் போன அவர் அங்கு ஜப்பானிய உணவு வகையான சுச்சி ரோல்ஸை வாங்கிச் சாப்பிட்டு ருசி பார்த்தார். அத்தோடு நில்லாமல் ஒரு போட்டோவும் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ளார்.

செம சாப்பாடு மச்சி

செம சாப்பாடு மச்சி

கிரேட் டின்னர். டவுன்ஹால் ரெஸ்டாரென்ட்டில் சகவீரர்களோடு இருக்கிறேன். சுச்சி ரோல்ஸ் சுவைத்துக் கொண்டிருக்கிறேன். செம டேஸ்ட் என்று அதில் சப்புக் கொட்டியுள்ளார் ஸ்மித்.

செம ஆட்டமும் கூட

செம ஆட்டமும் கூட

கடந்த 2 வாரமாக ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி வருகிறது புனே. ஹைதராபாத்தை அதன் சொந்த ஊரிலேயே வைத்து வீழ்த்திக் கலக்கியது புனே என்பது நினைவிருக்கலாம். இந்த சீசனில் ஹைதராபாத் சொந்த ஊரில் சந்தித்த முதல் தோல்வி இதுதான்.

கடந்த ஆண்டுக்குப் பரவாயில்லை

கடந்த ஆண்டுக்குப் பரவாயில்லை

கடந்த சீசனில் புனே அணி ரொம்பக் கேவலமாக ஆடியது. இந்த சீசனில் பரவாயில்லை என்று சொல்லக் கூடிய அளவில் அதன் ஆட்டம் உள்ளது. இந்த சீசனோடு குட்பை சொல்வதால் ஒவ்வொரு போட்டியையும் வீரர்களும், அதன் ரசிகர்களும் அனுபவித்துப் ஆடி வருகின்றனர்.

Story first published: Thursday, May 11, 2017, 12:47 [IST]
Other articles published on May 11, 2017
English summary
RPS captain Steve Smith visited Delhi's Town Hall restaurant and tasted famous Sushi Rolls in Khan Market
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X