போராடி டிரா செய்த இந்திய அணி வீரர்கள்... ஆட்ட நாயகன் என்னவோ ஸ்மித் தான்!
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டி டிரா ஆனது.
போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதல் இன்னிங்சில் சதமடித்த ஸ்மித், இரண்டாவது இன்னிங்சில் அரைசதத்தை எடுத்த நிலையில், அவர் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னியில் கடந்த 7ம் தேதி துவங்கி இன்று 5வது நாள் வரை நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டி டிரா ஆனது. இதையடுத்து இரு அணிகளும் தற்போது வரை சமநிலையில் உள்ளன. வரும் 15ம் தேதி இரு அணிகளுக்கான 4வது போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. அந்த போட்டியே இந்த தொடரின் வெற்றியை தீர்மானிக்கும்.
இந்நிலையில் இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதன் இன்னிங்சில் சதமும் இரண்டாவது இன்னிங்சில் அரைசதமும் அவர் அடித்துள்ள நிலையில் தற்போது ஆட்ட நாயகனாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications