Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!

கான்பெரா: ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறும் நிலையில், இந்த அறிவிப்பை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இன்று வெளியி்ட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆஷஸ் தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலிய அணி தொடரை இழந்துவிட்டது. 4வது டெஸ்ட் முடிவில், கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார். ஆஷஸ் கடைசி டெஸ்ட்டுடன் அவர் ஓய்வு பெற உள்ளார்.

Steven Smith appointed Australia’s next Test captain

எனவே, புதிய கேப்டனை தேர்ந்தெடுக்க, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 9 பேர் கொண்ட குழு இன்று கூடி ஆலோசனை நடத்தியது. முடிவில், ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமிக்க முடிவு எட்டப்பட்டது. துணை கேப்டனாக டேவிட் வார்னர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலும் ஸ்மித்தின் துணை கேப்டனாக வார்னரே செயல்படுவார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில், ஆஸ்திரேலிய டி20 அணி கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஆடாததால், டி20 போட்டியிலும் ஸ்மித் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் நம்பர்-1 டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்ற ஸ்மித், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 45வது கேப்டனாகும்.

Story first published: Friday, August 14, 2015, 15:34 [IST]
Other articles published on Aug 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+