Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்னுமே புரியல.. தொடர்ந்து ஏன் தோற்கிறோம்னு தெரியல? தோல்விக்கு பின் புலம்பிய ஸ்மித்

இந்தூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது.

உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக தொடரை இழந்தது அந்நாட்டு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Steven smith post match speech about loss vs india in indore odi

இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய ஆஸ்திரேலிய அணியில் தற்காலிக கேப்டன் ஸ்மித் வெளிப்படையாகவே குழம்பினார். இது குறித்து பேசிய அவர் இன்றைய ஆட்டத்தில் ஆடுகளத்தை நாங்கள் பார்க்கும் போது ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்தது. இந்த ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தலாம் என நினைத்தோம். ஆனால் கில் மற்றும் ஐயரை பாராட்ட வேண்டும்.

இருவரும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை எங்களிடம் இருந்து தூக்கிக்கொண்டு சென்று விட்டார்கள். அதன் பிறகு கே எல் ராகுலும் சூரியகுமார் யாதவும் விளையாடிய விதம் பிரமிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் விளையாடிய போது மழை குறுக்கிட்டது. அதன் பிறகு ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக மாறியது. இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தினார்கள்.

நாங்கள் தொடர்ந்து சில போட்டிகளை தோல்வியை தழுவி வருகிறோம்.முதலில் தென்னாப்பிரிக்காவிலும் தற்போது இந்தியாவிலும் தோற்று விட்டோம். எங்கள் அணியில் சில குறைகள் இருக்கிறது. அதனை நாங்கள் மாற்ற முயற்சி செய்கிறோம். உலகக் கோப்பை தொடருக்கு முன்பு நாங்கள் சரியான ஒரு அணியை கண்டுபிடித்து விடுவோம் என நினைக்கிறேன்.

இன்னும் சில நாட்கள் தான் இருக்கிறது.அதற்காக நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம் நாங்கள் மட்டுமல்ல இரண்டு அணிகளுமே உலக கோப்பை தொடருக்காக தான் தற்போது விளையாடி வருகிறோம்
கடைசி ஒரு நாள் போட்டியிலாவது நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது என ஸ்மித் கூறினார்.

Story first published: Sunday, September 24, 2023, 23:24 [IST]
Other articles published on Sep 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+