Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களுக்கு இது பெரிய அடி தான்.. நாக்பூர் ஆடுகளம் தொடர்பாக ஸ்மித் பேச்சு.. முக்கிய வீரர் விலகல்

நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை தொடங்கும் நிலையில் ஆடுகளம் குறித்து முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி கடந்த 18 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதனால் ஆஷஸ் தொடரை விட இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது தான் மிகவும் சிறந்தது என்று ஸ்மித் பேசியிருந்தது இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மித், இந்தத் தொடரில் சுழற் பந்துவீச்சை நாங்கள் அதிகமாக எதிர்கொள்ள போகிறோம் என்று எங்களுக்கு தெரியும்.

திறமையான பவுலர்கள்

திறமையான பவுலர்கள்

இதனால் பெங்களூருவில் நாங்கள் முகாமிட்டு தீவிரப் பயிற்சி மேற்கொண்டோம். நாங்கள் எதிர்பார்த்தது போல் நாக்பூர் ஆடுகளமும் மிகவும் காய்ந்த நிலையில் இருக்கிறது. இதனால் இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள் முதல் டெஸ்ட் போட்டியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நான் நினைக்கிறேன். எங்கள் அணியிலும் பல திறமை வாய்ந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

வாய்ப்பு

வாய்ப்பு

அஸ்வின் நிச்சயம் எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவார். இதேபோன்று எங்கள் அணியில் நாதன் லயன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என நம்புகிறேன். லயன் எங்கள் அணியின் சொத்தாக விளங்குவார் என நம்புகிறேன். ஹெசல்வுட் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருப்பது எங்களுக்கு நிச்சயம் பெரிய இடியாக கருதுகிறேன். ஆனால் வேகப்பந்துவீச்சாளர் ஸ்காட் போலான்ட் மாற்று வீரராக களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ரன் குவிப்பேன்

ரன் குவிப்பேன்

இந்த ஆடுகளத்தில் போலாண்ட் சிறப்பாக செயல்படுவார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை அவர் எங்களுக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்திருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர் லான்சும் திறமையான வீரராக அறியப்படுகிறார். ஆல்ரவுண்டர் கேமரான் கிரீன் முழு உடல் தகுதியை பெற்றால் எங்களுக்கு பந்துவீச்சில் நிறைய வாய்ப்புகள் இருக்கும். என்னை பொருத்தவரை நான் நல்ல மனநிலையில் இருக்கின்றேன். 2017 ஆம் ஆண்டு நான் இந்தியாவில் சிறப்பாக விளையாடினேன். அதேபோன்று ஒரு ஆட்டத்தை இம்முறையும் வெளிப்படுத்த நான் எதிர்பார்க்கிறேன் என்று ஸ்மித் கூறியுள்ளார்.

அதிரடி காட்டுவோம்

அதிரடி காட்டுவோம்

சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நீங்கள் எந்த திட்டத்தையும் வகுக்க வில்லை என்றால் உங்களுக்கு அது நெருக்கடியை தான் ஏற்படுத்தும். இதனால் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள இம்முறை பல திட்டங்களை வகுத்திருக்கின்றோம். ஆசிய ஆடுகளத்தில் விளையாடிய வீரர்கள் குறித்து நாங்கள் பேசினோம். அவர்கள் அனைவரும் எங்களை தைரியமாகப் பந்தை எதிர்கொண்டு விளையாடுங்கள் என்று தான் கூறியிருக்கிறார்கள். எனவே பொறுமையாக ஆடுவதை விட ரன் குவிக்க வேண்டும் என உத்வேகத்துடன் விளையாடினால் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஸ்மித் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, February 7, 2023, 16:54 [IST]
Other articles published on Feb 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+