இந்திய டெஸ்ட் தொடரில் இருந்து ஸ்டெய்ன் விலகல்.. இனி விளையாடமாட்டார்.. ஏன் தெரியுமா?
கேப் டவுன்: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து வருகிறது.
கேப்டவுனில் இருக்கும் நியூலாண்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் மோசமாக விளையாடி வருகின்றனர்.
முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா வெறும் 286 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா அணி அடுத்து விளையாடி வெறும் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தென்னாபிரிக்க பவுலிங் இதில் மிகவும் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவின் முக்கிய வீரரான டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

பவுன்சர் மன்னன்
தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவர் ஸ்டெய்ன். இந்திய பேட்ஸ்மேன்கள் இவரை சமாளிக்க வேண்டும் என்றே நிறையே பயிற்சிகள் எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் இவர் மட்டும் இரண்டு விக்கெட்டுகள் எடுத்தார். பவுன்சர்களால் இந்திய வீரர்களை கஷ்டப்படுத்தினார்.

விளையாட மாட்டார்
இந்த நிலையில் இவர் இன்றைய போட்டியில் விளையாட மாட்டார். மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் மீதம் இருக்கும் நாட்களிலும் பந்து வீச மாட்டார். நேற்று இவர் பந்து போடும் போது காலில் ஏற்பட்ட தசை விலகல் காரணமாக விலகி இருக்கிறார்.

விலகல்
நேற்றைய போட்டிக்கு பின் இவர் மருத்துவர்களை சந்தித்து ஸ்கேன் எடுத்தார். 4 வாரம் அவரை ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறித்தி இருக்கின்றனர். இதனால் அவர் இந்த டெஸ்ட் தொடரில் இருந்தே விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் நடக்கிறது
ஏற்கனவே அவர் கடந்த ஒருவருடமாக சர்ஜரி காரணமாக விளையாடாமல் இருந்தார். பின் கஷ்டப்பட்டு உடல் தகுதியை நிரூபித்து அணிக்கு திரும்பினார். தற்போது முதல் டெஸ்ட் போட்டி முழுதாக முடிவடைவதற்கு முன்பே அணியில் இருந்து விலகி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications