Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிளேஆப் முன்னேற பெங்களூர் அணிக்கு வாய்ப்பு உள்ளதா.... கோஹ்லிக்கு டிப்ஸ் கொடுக்கும் ரசிகர்!

Recommended Video

பெங்களூர் அணிக்கு வாய்ப்பு உள்ளதா....கோஹ்லிக்கு டிப்ஸ் கொடுக்கும் ரசிகர்!- வீடியோ

பெங்களூர்: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் நேற்று தோல்வியடைந்த பெங்களூர் அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறுவது ரொம்ப கஷ்டம் என்று கூறப்படும் நிலையில், வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறார் ஒரு ரசிகர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் 11வது சீசனில் நேற்று இரவு நடந்த 39வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வியடைந்தது.

Still change for RCB to qualify for play off in IPL

இதுவரை விளையாடிய 10 ஆட்டங்களில் 3ல் மட்டுமே வென்று 6 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் பெங்களூர் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது

அதே நேரத்தில், ஒரு பெங்களூர் ரசிகர், இன்னும் வாய்ப்புள்ளது என்று மிகவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தி வைரலாகி வருகிறது.

அடுத்து நடைபெற உள்ள அனைத்து ஆட்டங்களிலும் எந்தெந்த அணிகள் வெற்றி பெறும் என்பதை அவர் கணித்துள்ளார். அவருடைய கணிப்பின்படி, ஹைதராபாத் 22 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் 20 புள்ளிகளைப் பெறும். கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18 புள்ளிகளைப் பெறும்.

அடுத்து விளையாடும் நான்கு ஆட்டங்களிலும் பெங்களூர் வென்றால், 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்று அவர் கணித்துள்ளார்.

Story first published: Tuesday, May 8, 2018, 15:15 [IST]
Other articles published on May 8, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+