நடுவர்களின் தவறான முடிவு... டி.ஆர்.எஸ் முறையில் சர்ச்சை.... கடுப்பான ஜாக் லீச்
சென்னை: 2வது டெஸ்ட் போட்டியில் நடுவர்களின் தவறான முடிவால் ஜாக் லீச், டி.ஆர்.எஸ் முறையை கால்பந்துடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் இந்தியா 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 106 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
முதல் இன்னிங்சில் டி.ஆர்.எஸ் முறையில் நடுவர்கள் பாரபட்சம் காட்டுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது இந்நிலையில் ஜாக் லீச், டி.ஆர்.எஸ் முறையை வி.ஆர்.எஸ் முறையுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார்.

ரிவிவ்யூவ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான நடுவர்களின் முடிவுகள் பேசுப்பொருளாகியுள்ளது. குறிப்பாக ரஹானே குறித்த டி.ஆர்.எஸ் முறையை நடுவர் சரியாக பார்க்காததால் ஆட்டத்தின் போக்கு மாற்றியுள்ளது.

தவறான முடிவு
முதல் இன்னிங்சில் ஜாக் லீச் வீசிய 75வது ஓவரின் முதல் பந்தில் ரஹானேவின் பேட்டிற்கு அருகில் பந்து சென்று கீப்பர் கேட்சானது. இதற்கு அவுட் கேட்டு இங்கிலாந்து அணி டி.ஆர்.எஸ் கேட்டது.

உண்மை
இந்த ரிவ்யூவில் ரஹானே பேட்டில் பந்து படவில்லை எனக் கூறி நடுவர்கள் விக்கெட் கொடுக்க மறுத்தன. ஆனால் அதன் பிறகான ரீப்ளேவில் பந்து ரஹானேவின் கிளவுஸில் பட்டு சென்றது தெரியவந்தது.

ஆதங்கம்
நடுவரின் முடிவு குறித்து பேசியுள்ள ஜாக் லீச், டி.அர்.எஸ் முறை கால்பந்தின் வி.ஏ.ஆர் முறை போன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என கூறினார். நடுவரின் முடிவு எனக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், பின்னர் ரஹானேவின் விக்கெட்டை எடுத்தது கொஞ்சம் ஆறுதல் அளித்தது எனவும் லீச் கூறினார்.


Click it and Unblock the Notifications