ஆஸி. கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு.. ஏன், எதற்காக?

Posted By:

கெளஹாத்தி: இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியை மிகவும் எளிதாக வென்ற பின்னர் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சில மர்ம நபர்கள், அவர்கள் வந்த பஸ்ஸின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் ஆஸ்திரேலிய அணி சென்ற பஸ்ஸின் கண்ணாடி உடைந்தது. இது குறித்து ஆஸ்திரிய அணி வீரர் ஆரோன் பின்ச் கவலையுடன் டிவிட் செய்திருந்தார்.

 தொடர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

தொடர் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய மற்றும் இந்தியாவுக்கு இடையே கடந்த ஒருமாதமாக ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் நடை பெற்று வருகின்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. ஆஸ்திரேலிய அணியை 4-1 நேர கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி சர்வதேச ஒருநாள் தரவரிசையில் முதல் இடம் பெற்றது. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20யிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

 கெளஹாத்தி டி-20

கெளஹாத்தி டி-20

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி-20 போட்டி நேற்று கெளஹாத்தியில் நடைபெற்றது. போட்டியின் தொடக்கத்திலிருந்தே இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் திணறி வந்தது. இந்திய அணியின் கேப்டன் டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்தியா நிர்ணயித்த 119 என்ற ரன்னை மிக எளிதாக அடித்து ஆஸ்திரேலியா அணி அபாரமாக வென்றது. இந்த வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

 ஆஸ்திரேலிய வீரர்களின் பஸ்ஸில் கல் வீச்சு

ஆஸ்திரேலிய வீரர்களின் பஸ்ஸில் கல் வீச்சு

இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது சில மர்ம நபர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆஸ்திரேலிய அணி வீரர்கள் சென்ற பஸ்ஸின் மீது எதிர்பாராத விதமாக கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால அவர்கள் சென்ற பஸ்ஸின் கண்ணாடி உடைந்தது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

தாக்குதல் பற்றி ஆரோன் பின்ச் பேச்சு

இந்த மோசமான தாக்குதல் குறித்து ஆரோன் பின்ச் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்தார். "அறைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது எங்கள் பஸ்ஸின் மீது கல் வீசப் பட்டது , ஹோட்டலுக்கு செல்லும் வரையில் பயந்து கொண்டேதான் சென்றோம்" என அந்த டிவிட்டில் எழுதி இருக்கிறார்.

மூன்றாவது டி-20 போட்டி வரும் 13ம் தேதி ஹைதராபாத்தில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 11, 2017, 10:13 [IST]
Other articles published on Oct 11, 2017
Please Wait while comments are loading...