Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெட்டிப் பேச்சு வீணாப் போச்சு.. கவாஸ்கர் கடுப்பு!

டெல்லி: ஆக்ரோமாக ஆடுவோம், ஆவேசமாக ஆடுவோம் என்று வெட்டியாகப் பேசுவதை விட்டு விட்டு உருப்படியாக ஆடி வெற்றி பெற இந்திய அணி முயற்சிகக் வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கோபமாக கூறியுள்ளார்.

மிக மோசமான தோல்வியை இந்தியா, இலங்கையுடனான முதல் டெஸ்ட் போட்டியில் சந்தித்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் பிரமாதமாக ஆடி லீடிங்கும் பெற்று விட்டு பின்னர் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதன் மூலம் இந்தியா மிகப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா எதிர்பாராதவிதமாக தோல்வியைத் தழுவியுள்ளது. இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து கவாஸ்கர் தெரிவித்துள்ள கருத்து:

முதல்ல பேச்சை நிறுத்துங்கப்பா

முதல்ல பேச்சை நிறுத்துங்கப்பா

ஆவேசமாக ஆடுவோம், ஆக்ரோஷமாக ஆடுவோம் என்ற பேச்சை முதலில் இந்திய அணி நிறுத்த வேண்டும். பேசுவதை விட்டு விட்டு ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

வெற்றியில் கவனம் வேண்டும்

வெற்றியில் கவனம் வேண்டும்

வெற்றி பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். நல்ல கிரிக்கெட் ஆடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பேச்சு நமக்கு உதவாது. அணிக்குத் தேவையான உத்தியைக் கையாள வேண்டும்.

பொருத்தமான ஆட்டம் தேவை

பொருத்தமான ஆட்டம் தேவை

பிட்ச்சுக்கேற்ற முறையில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். யாருக்கு என்ன பொசிஷன் பொருத்தமாக இருக்குமோ அதில் கவனம் செலுத்த வேண்டும். யாருடன் விளையாடுகிறோமோ, அவர்களுக்கேற்ற உத்தியைக் கையாள வேண்டும்.

ஆக்ரோஷம் முக்கியமில்லை

ஆக்ரோஷம் முக்கியமில்லை

ஆக்ரோஷமாக ஆடுவது முக்கியமில்லை. மாறாக பொறுப்பான ஆட்டம் தேவை. எனவே இனிமேலும் பேசுவதை விட்டு விட்டு வெற்றியை மனதில் கொண்டு தேவையான முறையில் விளையாட வேண்டும்.

டிபன்ஸ் தவறில்லை

டிபன்ஸ் தவறில்லை

ஆக்ரோஷமாகத்தான் ஆட வேண்டும் என்று அவசியமில்லை. தேவைப்பட்டால் டிபன்ஸுக்கும் மாறத் தெரிந்து கொள்ள வேண்டும். கடைசியில் நமக்கு என்ன கிடைத்தது என்பதுதான் முக்கியம்.

மிக மோசமான தோல்வி

மிக மோசமான தோல்வி

இந்தியா முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி லீடிங் பெற்றது. நல்ல நிலையிலும் இருந்தது. ஆனால் கடைசியில் தோல்வியைத் தழுவியுள்ளது. இது மிக மோசமான தோல்வி.

2வது இன்னிங்ஸில் என்னாச்சு

2வது இன்னிங்ஸில் என்னாச்சு

முதல் இன்னிங்ஸில் அவ்வளவு பெரிய லீடிங்கைப் பெற்று 2வது இன்னிங்ஸில் சொதப்பியது அதிர்ச்சி தருகிறது. இது நல்ல பாடமாக அமைய வேண்டும்.

பொறுப்பாக நிதானித்து ஆடியிருக்கலாம்

பொறுப்பாக நிதானித்து ஆடியிருக்கலாம்

170 என்ற இலக்கு கடினமானதாக இருக்கும் என்று நான் ஆரம்பத்திலேயே கூறியிருந்தேன். எனவே நிதானமாக பொறுப்பாக தனது 2வது இன்னிங்ஸை இந்தியா ஆடியிருக்க வேண்டும்.

திரும்பி வர முடியும்

திரும்பி வர முடியும்

இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்தியாவிடம் மீண்டு வரும் திறமை உள்ளது. நிச்சயமாக மீண்டு வர முடியும். முதல் தோல்வி நிச்சயம் அணிக்கு மனதளவில் பின்னடைவை ஏற்படுத்தும்தான். இதை நான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறேன். ஆனால் மீண்டு வர முடியும்.

கோஹ்லி, ரவி சாஸ்திரி முயல வேண்டும்

கோஹ்லி, ரவி சாஸ்திரி முயல வேண்டும்

முதல் தோல்வியின் மன வேதனையிலிருந்து அணியை மீட்டுக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு கோஹ்லிக்கும், ரவி சாஸ்திரிக்கும் உள்ளது. வீரர்களைத் தட்டிக் கொடுத்து அடுத்த போட்டிகளுக்குத் தயார்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் கவாஸ்கர்.

Story first published: Sunday, August 16, 2015, 12:01 [IST]
Other articles published on Aug 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+