Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே..! செமிபைனலில் இந்தியா, நியூசி.. 11 ஆண்டுகளுக்கு பின் அதிசய நிகழ்வு

Recommended Video

World Cup 2019 : Ind Vs Nz : அதே அணி, அதே கேப்டன்..வரலாறு மீண்டும் திரும்புகிறது- வீடியோ

லண்டன்: நடப்பு உலக கோப்பை தொடர் அரையிறுதியில் 11 ஆண்டுகளுக்கு பின் கோலி தலைமையில் இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணியும் மோதுகிறது.

2019 உலகக்கோப்பை தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. லீக் சுற்றுகள் முடிந்து விட்டன. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன.

அதில் முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் வரும் செவ்வாயன்று மோதுகின்றன. வியாழக்கிழமை 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் சந்திக்கின்றன. 2 போட்டிகளிலும் வெல்லும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை இறுதிபோட்டியில் சந்திக்கின்றன.

11 ஆண்டுகளுக்கு முன்பு

11 ஆண்டுகளுக்கு முன்பு

இந்தியாவின் அரையிறுதி, ஒரு முக்கிய அம்சத்தை இந்திய ரசிகர்களுக்கு நினைவு படுத்தி இருக்கிறது. முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசி. அணிகள் மோதும் போட்டி 11 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு போட்டியை ஞாபக படுத்துகிறது.

உலக கோப்பை தொடர்

உலக கோப்பை தொடர்

2008-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை அரையிறுதியில் இதே இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. அப்போது இந்திய அணியின் விராட் கோலி. மறுபக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக கேன் வில்லியம்சன் இருந்தார்.

வென்றது இந்தியா

அந்த போட்டியில் முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழந்து 208 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இந்தியா ஆடிய போது மழை வந்தது. எனவே, 43 ஓவராக குறைக்கப்பட்ட 191 ரன்கள் இலக்காக வைக்கப்பட்டது. அதில் கோலி 43 ரன் எடுக்க, அவரது உதவியால் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

11 ஆண்டுகள் கழிந்தன

11 ஆண்டுகள் கழிந்தன

தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதே கேப்டன்கள் தலைமையில் உலக கோப்பை தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. 2008ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. தற்போது நடைபெறவிருக்கும் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று பழிதீர்க்குமா அல்லது இந்திய அணி வெற்றி பெற்று சாதிக்குமா என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த இருவர்

அந்த இருவர்

2008-ம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணியில் கோலியும் ஜடேஜாவும், நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன், டிம் சவுதி ஆகியோர் இருந்தனர். இவர்கள் தற்போதைய உலகக்கோப்பை தொடரிலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, July 7, 2019, 18:29 [IST]
Other articles published on Jul 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+