Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எலேய்! ஓடாத நில்லு.. மானம் போகுது.. விழுந்து வாரிய போலீஸ்.. கைதட்டி ரசித்த கூட்டம்

கல்லே : இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் முடிவின் போது வீரர்களை நோக்கி ஒருவர் அரைகுறை ஆடையோடு நடு மைதானத்தில் ஓடினார்.

அதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மைதான காவலர்கள் மற்றும் இலங்கை போலீஸ் அந்த நபரை பிடிக்க முடியமால் தடுமாறிய நகைச்சுவை சம்பவமும் நடந்தேறியது.

இங்கிலாந்து வெற்றி பெற்றது

இங்கிலாந்து வெற்றி பெற்றது

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் கடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெறாமல் இருந்து வந்தது. அதை உடைத்து முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

உள்ளாடையோடு ஓடிய நபர்

உள்ளாடையோடு ஓடிய நபர்

இந்த போட்டியைக் காண ஏராளமான இங்கிலாந்து நாட்டினர் இலங்கை வந்துள்ளனர். டெஸ்ட் போட்டி அதிக சுவாரஸ்யமின்றி இருந்த நிலையில், போட்டியில் இங்கிலாந்து வென்றது. அப்போது தான் மிக சுவாரஸ்யமான அந்த சம்பவம் நடந்தது. ஒரு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபர் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு மைதானத்துக்குள் நுழைந்து ஓடினார்.

பத்து பேர் இருந்தும் பிடிக்க முடியலை

பத்து பேர் இருந்தும் பிடிக்க முடியலை

கிரிக்கெட் வீரர்களுக்கு அருகே அவர் சென்ற நிலையில், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை துரத்தத் துவங்கினர். அவர்களுக்கு செமையாக ஆட்டம் காட்டிய அந்த நபர், பவுண்டரி அருகே வந்த போது பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

கை தட்டி ரசித்த மக்கள்

ஒரே ஆள் எராளமான காவலர்களை ஏமாற்றி ஆட்டம் காட்டினார். இடையே சில காவலர்கள் விழுந்து வாரினர். டெஸ்ட் போட்டியை விட மிக சுவாரஸ்யமானதாக இருந்ததால், இங்கிலாந்து ரசிகர்கள் இதை கை தட்டி ரசித்துக் கொண்டு இருந்தார்கள்.

Story first published: Sunday, November 11, 2018, 13:58 [IST]
Other articles published on Nov 11, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+