மிர்பூர்: ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 21 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இந்திய அணியின் அனில் கும்ப்ளேவின் சாதனையை 21 ஆண்டுகளுக்குப் பின்னர் முறியடித்துள்ளார் ஸ்டூவர்ட் பின்னி.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் மோதி ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்றியுள்ளது. 105 ரன்களில் இந்தியாவை சுருட்டியது வங்கதேசம். இதற்கு பதிலடியாக அந்த அணியை இந்தியா 58 ரன்களில் சுருட்டியது.

இதற்கு காரணம் இந்திய அணியின் ஸ்டூவர்ட் பின்னிதான். அவர் வெறும் 4 ரன்களே கொடுத்து மொத்தம் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
பின்னி வீசிய ஓவர்கள் 4.4 . இதில் 2 மெய்டன்கள் அடங்கும். கொடுத்த ரன்கள் 4 தான்.
இந்திய அணியின் மோகித் சர்மா 8 ஓவர்களில் 22 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதற்கு முன்னர் 1993ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 12 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அனில்கும்ப்ளே அள்ளியதுதான் சாதனையாக இருந்தது.
தற்போது 21 ஆண்டுகளுக்குப் பின்னர் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளி பின்னி, அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
அனில் கும்ப்ளேயும் பின்னியும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.