Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் தலைசிறந்த 10 பந்து வீச்சாளர் பட்டியலில் ஸ்டூவர்ட் பின்னி

மிர்ப்பூர்: வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று மிர்புரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 25.3 ஓவரில் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணி சார்பில் டஸ்கின் அகமது 5, மொர்டசா 2 விக்கெட் வீழ்த்தினார்.

வங்கதேசம் அதிர்ச்சி

வங்கதேசம் அதிர்ச்சி

எளிய இலக்குதானே என்று நினைத்து பேட்டிங் செய்ய வந்த வங்கதேச அணியை இந்திய பவுலர்கள் காய்ச்சி எடுத்துவிட்டனர். வங்கதேச அணி 17.4 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 47 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பில் பின்னி 6, மோகித் 4 விக்கெட் வீழ்த்தினர்.

இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்

இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், நேற்று இந்திய அணி தனது குறைந்தபட்ச (105) ஸ்கோரை எடுத்தது. இதற்கு முன், 2007 உலக கோப்பை போட்டியில் (போர்ட் ஆப் ஸ்பெயின்) 191 ரன்னுக்கு சுருண்டது.

வங்கதேசத்துக்கும் அப்படித்தான்..

வங்கதேசத்துக்கும் அப்படித்தான்..

58 ரன்னுக்கு சுருண்ட வங்கதேச அணி, இந்தியாவுக்கு எதிராக, தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. இதற்கு முன், 2003ல் 76 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது. 2011, மார்ச் மாதம் இதே மிர்புர் மைதானத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 58 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருந்த வங்கதேச அணி, நேற்று மீண்டும் இதே ரன்னுக்கு ஆல் அவுட்டானது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இது தான் வங்கதேச அணியின் குறைந்த பட்ச ஸ்கோர்.

கும்ளே சாதனை தகர்ப்பு

கும்ளே சாதனை தகர்ப்பு

4 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் சாய்த்த ஸ்டூவர்ட் பின்னி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். மேலும், இந்திய அளவில் முதலிடத்தில் இருந்த கும்ளேயின் (12 ரன்னுக்கு, 6 விக்கெட்) என்ற சாதனையையும் தகர்த்தார். முன்னதாக கும்ளே 1993ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இந்த சாதனையை செய்திருந்தார்.

இவர்தான் நம்பர்-1

இவர்தான் நம்பர்-1

ஒரு நாள் போட்டிகளில் ஒரே போட்டியில், அதிக விக்கெட் எடுத்த சாதனையை பொறுத்தளவில், உலகளவில் இலங்கையின் இடக்கை மிதவேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் 19 ரன்னுக்கு 8 விக்கெட் வீழ்த்தி முதலிடத்திலுள்ளார். 2003ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இச்சாதனையை அவர் நிகழ்த்தினார்.

சாதனை நாயகர்கள்

சாதனை நாயகர்கள்

பாகிஸ்தானின் அப்ரிதி 12/7 , ஆஸ்திரேலியாவின் மெக்ராத் 15/7, ஆஸ்திரேலியாவின் அன்டி பிக்கெல் 20/7, இலங்கையின் முத்தய்யா முரளிதரன் 30/7, வக்கார் யூனிஸ் 36/7, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அக்குய்ப் ஜாவித் 37/7, மேற்கிந்திய தீவுகளின் டேவிஸ் 51/7 ஆகியோர் சிறந்த பவுலர்களாக உள்ளனர். இவர்களுக்கு அடுத்து, பின்னி சிறந்த பவுலிங்கை 4 /6 பதிவு செய்த, 9வது வீரர் ஆகியுள்ளார்.

ஆறுதான் அதிகம்

ஆறுதான் அதிகம்

இந்திய அணியை பொறுத்தளவில் பின்னிதான் ஒருநாள் போட்டியொன்றில், குறைந்த ரன்விட்டுக் கொடுத்து அதிக விக்கெட் எடுத்த நம்பர் ஒன் பவுலர். இவருக்கு அடுத்து 12 ரன்களுக்கு ஆறு விக்கெட் எடுத்த அனில் கும்ளே உள்ளார். 2003ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின்போது இங்கிலாந்துக்கு எதிராக 23 ரன்களுக்கு ஆறுவிக்கெட் வீழ்த்திய ஆஷிஷ் நெக்ரா 3வது இடத்திலுள்ளார்.

சாதித்த தமிழன்

சாதித்த தமிழன்

2004ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில், 27 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்திய சமீபத்தில் ஓய்வு பெற்ற, தமிழக வீரர் முரளி கார்த்திக் 4வது இடத்திலுள்ளார். முரளி கார்த்திக்கிற்கு அடுத்த இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்க்கர் உள்ளார். இவர் 2004ம் ஆண்டு மெல்பர்னில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 42 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை சுருட்டினார்.

Story first published: Wednesday, June 18, 2014, 11:48 [IST]
Other articles published on Jun 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+