
சாம் கர்ரன் அதிரடி அரைசதம்
இங்கிலாந்து அணி இலங்கையில் கிரிக்கெட் ஆடி வருகிறது. அங்கே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் சாம் கர்ரன் அரைசதம் அடித்தார். அவர் தனது முதல் நான்கு ரன் பவுண்டரியை அடிக்கும் முன்னர், ஆறு சிக்ஸர்கள் அடித்தார் (ஒரே ஓவரில் அல்ல).

இன்ஸ்டாகிராம் பதிவு
இதை குறிப்பிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "யாராவது ஒருவர் தன் முதல் ஃபோர் அடிக்கும் முன்னர் ஆறு சிக்ஸர்கள் அடித்து பார்த்து இருக்கிறீர்களா?" என கேட்டு பதிவிட்டு இருந்தனர்.
View this post on InstagramEver seen someone smash six sixes before they hit their first four? 💪 #slveng #englandcricket
A post shared by We Are England Cricket (@englandcricket) on
ஒருவேளை யுவராஜ் சிங்கா?
இந்த பதிவிற்கான கமெண்ட் பகுதியில் ஸ்டுவர்ட் பிராடு "யுவராஜ் சிங்?" என கேள்விக் குறியோடு யுவராஜ் பெயரை குறிப்பிட்டு இருந்தார். யுவராஜ் சிங் ஒரே ஓவரில் அடித்த ஆறு சிக்ஸர்களுக்கு முன்னர் மூன்று பவுண்டரிகள் அடித்து இருந்தார். எனினும், பிராடு அதை இங்கே கேள்வியோடு சந்தேகமாக குறிப்பிட்டுள்ளார்.

அன்று நடந்தது என்ன?
யுவராஜ் சிங் தன் பந்து வீச்சில் ஆறு சிக்ஸர்கள் அடித்ததை பிராடு மறக்கவில்லை என தெளிவாக தெரிகிறது. அந்த போட்டியில் யுவராஜ் சிங்கிடம் மற்றொரு இங்கிலாந்து வீரர் பிளின்டாஃப் வம்பிழுத்தார். அதனால் கோபமடைந்த யுவராஜ் சிங் ஸ்டுவர்ட் பிராடு வீசிய ஓவரில் தொடர்ந்து ஆறு சிக்ஸர்கள் விளாசி கிரிக்கெட் உலகையே ஸ்தம்பிக்கச் செய்தார்.


Click it and Unblock the Notifications