Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் ரியல் 'கம்பேக்..'6ஆவது ரேங்க் டூ உலக சாம்பியன்..பழைய பன்னீர் செல்வமாக திரும்பிய ஆஸ்திரேலியா

துபாய்: உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னர் சர்வதேச ரேங்கில் 6ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, உலகக் கோப்பை தொடரில் ரியல் கம்பேக்கை கொடுத்துள்ளது.

துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என இரண்டு அணிகளுமே இதுவரை டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதால் இந்த போட்டியில் அனல் பறந்தது.

 தடுமாறிய நியூசிலாந்து

தடுமாறிய நியூசிலாந்து

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. ஹேசில்வுட் வீசிய 4ஆவது ஓவரில் ஆஸ்திரேலியா தனது முதல் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் 10 ஓவர்கள் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்ட நியூசிலாந்து, அடுத்து மீண்டும் அதிரடி காட்டத் தொடங்கியது. குறிப்பாக கேன் வில்லியம்சன் காட்டிய அதிரடியில் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. குறிப்பாக ஸ்டார்க் வீசிய 16ஆவது ஓவரில் 4 பவுன்டரி, ஒரு சிக்சர்களை பறக்கவிட்டார் கேன் வில்லியம்சன். முடிவில் 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 172 ரன்களை எடுத்தது.

 தட்டித்தூக்கிய ஆஸ்திரேலியா

தட்டித்தூக்கிய ஆஸ்திரேலியா

அடுத்துக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. போல்ட் வீசிய 3ஆவது ஓவரில் கேப்டன் ஃபின்ச் 5 ரன்களில் வெளியேறினார். அடுத்து மிட்செல் மார்ஷுடன் கை கோர்த்த வார்னர் அதிரடியாக விளையாடத் தொடங்கினார். இதனால் ஆஸ்திரேலியா ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. சிறப்பாக ஆடி வந்த வார்னர் 34 பந்துகளில் அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் வெளியேறினார். மறுபுறம் சிக்ஸர் பவுன்டரி எனப் பறக்கவிட்ட மார்ஷ் 31 பந்துகளில் அரைசதம் அடித்தார். வார்னருக்கு பின் களமிறங்கிய மெக்ஸ்வெல்லும் அதிரடி காட்ட 19ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்குத் தேவையான 173 ரன்களை எடுத்து வென்றது.

 இது தான் ரியல் கம்பேக்

இது தான் ரியல் கம்பேக்

டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வது இதுவே முதல்முறையாகும். சொல்லப்போனால் ஆஸ்திரேலியா இந்த உலகக் கோப்பையை வெல்லும் என யாரும் கணிக்கவில்லை. ஐசிசி டி20 தரவரிசை பட்டியலில் 6ஆவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவால் கோப்பை வெல்ல முடியாது என கி்ட்டதட்ட அனைவரும் முடிவு செய்துவிட்டனர். சூப்பர் 12 சுற்றில் கடினமான க்ரூப்பில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்ற பல வல்லுநர்களும் கருத்து தெரிவித்தனர். இருப்பினும், ஐசிசி தொடர் என்பதாலோ என்னவோ பழைய பன்னீர் செல்வமாக வந்து மற்ற அணிகளை அலறவிட்டுள்ளது.

 டேவிட் வார்னர்

டேவிட் வார்னர்

ஆஸ்திரேலியா அணிக்கு மட்டுமில்லை அந்த அணியின் தொடக்க வீரர் வார்னரும் சூப்பர் கம்பேக்கை கொடுத்துள்ளார். கடந்த ஒரு ஆண்டாகவே தடுமாறி வந்தார் வார்னர். ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து சொதப்ப ஹைதராபாத் அணியும் கூட அவரை ஓரம் கட்டியது. மிக மோசமான நிலையிலிருந்த வார்னர், உலகக் கோப்பை தொடரில் சூப்பர் கம்பேக்கை கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் 7 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 289 ரன்களை குவித்துள்ளார். இதுவே ஆஸ்திரேலிய அணிக்கு மிகப் பெரிய நிம்மதி

 டாஸ் முக்கியம்

டாஸ் முக்கியம்

டாஸில் தோற்ற போதே நியூசிலாந்து அணி வெல்வது கடினம் எனப் பலரும் கூறினர். இருப்பினும், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 172 ரன்களை குவித்தது. இருப்பினும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை அந்த அணியால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே நியூசிலாந்து இறுதிப் போட்டியில் தோல்வியைத் தழுவியது. ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வீழ்வது இது 4ஆவது முறை. அதிகபட்சமாக இங்கிலாந்து 6 முறையும், இந்தியா 5 முறையும் ஐசிசி தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

Story first published: Monday, November 15, 2021, 0:13 [IST]
Other articles published on Nov 15, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+