For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நீ சிங்கம்தான் தல" ஓய்வை அறிவிச்சிடுவாரோ.. பீதியில் இருக்கும் ரசிகர்கள்.. சிஎஸ்கே எமோஷனல் மீம்ஸ்!

சென்னை: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

Stunning memes from social media after KKR beat CSK by 6 Wickets in IPL 2023

நடப்பு சீசனில் கொல்கத்தா அணியின் சுனில் நரைன் பெரியளவில் விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. கேகேஆர் அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. ஆனால் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை ரெண்டு படத்தில் வடிவேலு, "எங்கம்மா நம்ம ஆட்டோக்கார தம்பி" என்று ஒரு வசனம் செல்லுவார். அதனை வடிவேலுவாக சுனில் நரைனை மாற்றி, ஃபார்ம்-க்கு வரணுமே.. எங்க நம்ம ஆட்டோக்கார தம்பி என்று தேடுவது போலவும், ஆட்டோக்கார தம்பியாக சென்னை அணியை மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

Stunning memes from social media after KKR beat CSK by 6 Wickets in IPL 2023

சென்னை அணியின் பேட்ஸ்மேன் மொத்தமாக சொதப்பிய நிலையில், இளம் வீரர் சிவம் துபே மட்டும் 34 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். நடப்பு சீசனில் மட்டும் 363 ரன்களை குவித்துள்ளார். இவரை பாராட்டும் வகையில் 83 படத்தில் ஸ்ரீகாந்த் பேசும், "எனக்கு இந்த டொக்கு டொக்கு பேட்டிங்லாம் வராது.. டிஃபென்ஸ்லாம் ஆட தெரியாது" என்று ஒரு வசனம் சொல்லுவார். அதனை மாற்றி சிவம் துபேவாக மாற்றி, The Man, The Myth and The Legend என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சரவெடி.

Stunning memes from social media after KKR beat CSK by 6 Wickets in IPL 2023

நேற்றையப் போட்டியில் கேகேஆர் அணியின் ரிங்கு சிங் 43 பந்துகளில் 54 ரன்கள் விளாசி அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார். நடப்பு சீசனில் மட்டும் 407 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். இவரை புஷ்பாவாக மாற்றி, "இங்க நான் ரூல் பண்ணதான் வந்துருக்கேன். அத யாராலும் மாற்ற முடியாது" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

Stunning memes from social media after KKR beat CSK by 6 Wickets in IPL 2023

நேற்றையப் போட்டி முடிவடைந்த பின் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தனது சட்டையில் தல தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கினார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்தனர். இதனை இளையராஜாவே ஏஆர் ரஹ்மானிடம் வந்து ஆட்டோகிராஃப் போன்ற நிகழ்வு என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் எமோஷனல் டச்.

Stunning memes from social media after KKR beat CSK by 6 Wickets in IPL 2023

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் சென்னை அணி கேப்டன் எம்எஸ் தோனி, மைதானத்தை சுற்றி வந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதில் காலில் காயமடைந்தும், மைதானம் முழுக்க நடந்து வந்தார். இதனை பத்துதல படத்தில் சிம்புவை பார்த்து நன்றி சொல்லும் மக்களுடன் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல்.

Story first published: Monday, May 15, 2023, 7:59 [IST]
Other articles published on May 15, 2023
English summary
CSK vs KKR: After KKR won against CSK by 6 Wickets, CSK fans created some fantastic memes in Social Media.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+