Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்ம இந்தியாவா இது..? ஸ்டம்புகள் சிதறும் பந்துவீச்சு.. பும்ரா, புவி இல்லாமல் அசத்தும் இளம் படை

தர்மசாலா: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி தர்மசாலாவில் இன்று தொடங்கியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து 2 போட்டிகள் நடைபெறுவதால், இன்று புதிய ஆடுகளம் பயன்படுத்தப்பட்டது.

இந்தப் போட்டியில் முகமது சிராஜ், அவேஷ் கான், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அனல் பறக்கும் பந்துவீச்சு

அனல் பறக்கும் பந்துவீச்சு

ஆட்டத்தின் முதல் ஓவரை இந்திய வீரர் சிராஜ் வீசினார். சிராஜ் தனது உயரத்தை அழகாக பயன்படுத்தி பந்தை நன்றாக பவுன்ஸ் மற்றும் ஸ்விங் செய்தார். இதனால் இலங்கை அணி வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் கடுமையாக திணறினர். முதல் ஓவரின் கடைசி பந்தில் குணதிலகா ஷாட் ஆட முற்பட்டு, பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்டம்புள் சிதறின.

ஆவேஷ் கான்

ஆவேஷ் கான்

இதனைத் தொடர்ந்து 2வது ஓவரை இந்திய வீரர் ஆவேஷ் கான் வீசினார். ஆவேஷ் கானும் ஐபிஎல் தொடரில் எப்படி விளையாடினாரோ, அதே போல் அனல் பறக்க பந்துவீச, இலங்கை அணி வீரர்கள் எப்படி டா இந்த ஓவரை எதிர்கொள்வது என்று திணறினர். 2வது ஓவரின் 5வது பந்தில் கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய நிசாங்கா தூக்கி அடித்து 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இது ஆவேஷ் கானின் முதல் சர்வதேச விக்கெட் ஆகும்.

மிஸ் ஆன டிஆர்எஸ்

மிஸ் ஆன டிஆர்எஸ்

இதே போன்று ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை சிராஜ், அதே வேகத்தில் பந்து வீசினார். அப்போது பந்தை கணிக்க முடியாமல் லியானங்கே பேடில் பந்து பட, இந்தியா அவுட் கேட்டது. ஆனால் நடுவர் அவுட் தர வில்லை. இதனையடுத்து இந்தியா மறு ஆய்வு செய்ய, பந்து நன்கு ஸ்விங் ஆகி அது அவுட் இல்லை என தெரியவந்தது. அந்த ஓவரில் இலங்கை 5 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

தடுமாறும் இலங்கை

தடுமாறும் இலங்கை

இதனையடுத்து, மீண்டும் அவேஷ் கான் 4வது ஓவரை வீச, விட்டால் போதும் டா என்பது போல் இலங்கை வீரர்கள் கதி கலங்கினர். குறிப்பாக அசலங்கா தூக்கி அடிக்க முற்பட்டு, பந்து உயரத்திற்கு செல்ல, அதனை சஞ்சு சாம்சன் பிடித்தார். இதனால் 4 ஓவர் முடிவில் இலங்கை அணி பவர் பிளே முடிவில் 18 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. முன்னணி பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இந்திய அணி, அபாரமாக செயல்படுவது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Story first published: Sunday, February 27, 2022, 19:47 [IST]
Other articles published on Feb 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+