அடுத்த வருடம் முழுக்க.. இவங்க 2 பேர்தான் ஓப்பனிங்.. பிசிசிஐ செம ஸ்கெட்ச்..தூக்கப்படும் முக்கிய வீரர்
சிட்னி: இந்திய அணியில் அடுத்த வருடம் நடக்க உள்ள பெரும்பாலான டெஸ்ட் தொடர்களில் சுப்மான் கில்தான் ஓப்பனிங் இறங்குவார் என்று கூறப்படுகிறது. சுப்மான் கில்லுடன் ஓப்பனிங் இறங்க போகும் இன்னொரு வீரர் யார் என்பது தொடர்பான தகவல்களும் வெளியாகி உள்ளது.
இந்திய அணியில் தற்போது ஓப்பனிங் வீரராக இருக்கும் மயங்க் அகர்வால் சரியாக ஆடுவது இல்லை. ஐபிஎல் தொடரில் இவர் சிறப்பாக ஆடினாலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் மோசமாக சொதப்பினார்.
முக்கியமாக ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக களமிறங்கிய சுப்மான் கில் மிக மோசமாக ஆடி அதிர்ச்சி அளித்தார். டெஸ்ட் தொடரிலும் இவர் சரியாக ஆடவில்லை.

ஏமாற்றம்
முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக ஆடி ஏமாற்றம் அளித்தார். அதன்பின் தற்போது நடந்து முடிந்த இரண்டாம் டெஸ்டிலும் மயங்க் அகர்வால் ஏமாற்றம் அளித்தார். இந்த நிலையில்தான் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இவர் ஆட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.

மூன்றாவது டெஸ்ட்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி மாதம் நடக்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா ஆட உள்ளார். ரோஹித் சர்மா வந்தால் இந்திய அணியில் ஒருவரை நீக்க வேண்டும். இது யார் என்ற சந்தேகம் நிலவி வந்த நிலையில்.. இந்திய அணியில் மயங்க் அகர்வால்தான் நீக்கப்படுவார் என்கிறார்கள்.

எப்படி
இந்திய அணியில் அடுத்த போட்டியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் ஓப்பனிங் இறங்க உள்ளனர். இந்த போட்டியில் மட்டுமின்றி அடுத்த நடக்க உள்ள இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடரிலும் இவர்கள் இருவர்தான் ஓப்பனிங் இறங்க உள்ளனர். இந்திய அணியில் அறிமுகமான சுப்மான் கில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார்.

நம்பிக்கை
டெஸ்ட் போட்டிகளில் சுப்மான் கில் மிகப்பெரிய அளவில் நம்பிக்கை அளித்துள்ளார். ஆஸ்திரேலிய பவுலர்களை இவர் சிறப்பாக எதிர்கொண்டு ஆடி வருகிறார். இதனால் இந்தியாவில் நடக்க உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இவர்தான் ஓப்பனிங் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

ரோஹித்
அதேபோல் ரோஹித் சர்மாவும் காயத்தில் இருந்து விடுபட்டு உள்ளார். இதனால் அடுத்த வருடம் முழுக்க இந்திய டெஸ்ட் அணியின் ஓப்பனிங் ஜோடி இவர்கள்தான் என்பது உறுதியாகி உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் அடுத்த 5-10 வருடங்கள் சுப்மான் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications