சுப்மன் கில்-ன் வெறியாட்டம்.. தைரியமாக சண்டை செய்த ஜிம்பாப்வே.. 3வதுபோட்டியில் இந்தியா த்ரில் வெற்றி
ஹராரே: ஜிம்பாப்வே அணியுடனான ஒருநாள் தொடரை இந்திய அணியை வைட் வாஷ் செய்து அசத்தியுள்ளது.
Recommended Video
இரு அணிகளும் மோதிய கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதிரடி ஓப்பனிங்
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. ஓப்பனிங் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 63 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 48 ரன்களும், கேப்டன் கே.எல்.ராகுல் 30 ரன்களும் அடித்தனர். ஆசிய கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள ராகுல் ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்துள்ளார்.

சுப்மன் கில் அதிரடி
இதன் பின்னர் வந்த சுப்மன் கில் ஜிம்பாப்வே அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். 97 பந்துகளை சந்தித்த அவர் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 130 ரன்களை விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் அடிக்கும் முதல் சதம் இதுவாகும். அவருக்கு உறுதுணையாக விளையாடிய இஷான் கிஷான் 50 ரன்களை விளாசினார். இதன்பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுக்கு வெளுயேற 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்களை குவித்தது.

சொதப்பிய ஜிம்பாப்வே
இதன்பின்னர் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு இந்த முறையும் சொதப்பல் பேட்டிங்கே அமைந்தது. தொடக்க வீரர்கள் கைடானோ 13 ரன்களுக்கும், இன்னசெண்ட் கையா 6 ரன்களுக்கும் வெளியேறினர். இதன் பின்னர் வந்த சீன் வில்லியம்ஸ் (45), டோனி (15), என அனைவரும் சொதப்ப 169 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. இதனால் இந்தியா சுலபமாக வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.

த்ரில் வெற்றி
ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சிகாந்தர் ராசா ட்விஸ்ட் கொடுத்தார். இந்திய பவுலிங்கை சிதறடித்த அவர் சதமடித்து பதற்றத்தை அதிகரித்தார். அவரின் அதிரடியால் ஜிம்பாப்வே வெற்றி பெற 12 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. எனினும் கடைசி நேரத்தில் அவரை ஷர்துல் தாக்கூர் வீழ்த்த அந்த அணி 49.3 ஓவர்களில் 276 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியும் 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications