சச்சின் மகள் இல்லையா அப்போ.. நடிகை சாரா அலிகானுடனான உறவு.. முதல் முறையாக சுப்மன் கில் பதில்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் நடிகை சாரா அலிகானுடன் நெருங்கிய உறவில் இருப்பது குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக பார்க்கப்படும் வீரர்களில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில்லும் ஒருவர். இவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கான இடத்தை உறுதி செய்துவிட்டார்.
இவர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவுடன் உறவில் இருந்ததாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகின. புகைப்படங்களும் வெளியாகின. பின்னர் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டு, துறை ரீதியாக கவனம் செலுத்தினர்.

2வது டேட்டிங்
இப்படி இருக்கையில் தான் கடந்த சில மாதங்களாக சுப்மன் கில்-ன் வாழ்க்கையில் வந்துள்ளார் நடிகை சாரா அலிகான். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவரும், சுப்மன் கில்லும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் பரவின. இதனை உறுதி செய்யும்விதமாக, இருவரும் மும்பை நகரத்தை ஒன்றாக வலம் வருவது, இரவு உணவிற்கு செல்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

உறுதி செய்த ரசிகர்கள்
இதற்கும் ஒருபடி மேல் சென்றது இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக பயணித்து வருவது தான். சாரா அலிகான் சமீபத்தில் விமானத்தில் எங்கேயோ செல்வது போன்று புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதில் சுப்மன் கில்-ம் அருகில் அமர்ந்துக்கொண்டிருந்தார். இதனால் இருவரின் காதலையும் ரசிகர்கள் உறுதி செய்துக்கொண்டனர்.

சுப்மன் கில் பதில்
இந்நிலையில் இதுகுறித்து முதல்முறையாக சுப்மன் கில் பேசியுள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவரிடம், " பாலிவுட்டில் மிகவும் ஃபிட்டான நடிகை யார்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் உடனடியாக சாரா அலிகான் எனக் கூறினார். இதனை தொடர்ந்து தான் நீங்கள் சாராவுடன் டேட்டிங் செய்து வருகிறீர்களா என கேட்கப்பட்டது.

என்ன பதில் ?
இந்த கேள்விக்கு சற்று யோசித்த சுப்மன் கில், அப்படியும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என ரசிகர்களை குழப்பும் வகையில் பதிலளித்துள்ளார். இதன் மூலம் சுப்மன் கில் தன் வாயினாலேயே கிட்டத்தட்ட சாராவுடனான உறவை கூறியுள்ளார். இதுகுறித்து சாராவும் விரைவில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications